எழுதி வச்சுக்கோங்க.. இது நடந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்.. வீரேந்தர் சேவாக் ஓபன் டாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி இருக்கிறது. சீசன் தொடக்கத்தில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதும் வேளையில் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று நக்கலான விமர்சனத்தை வீரேந்திர சேவாக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு சீசனைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல்லில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ். ஏனெனில் மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 42 வயதாகி வருவதால் கிட்டத்தட்ட இதுவே அவருடைய கடைசி சீசனாக இருக்கும் என்று அனைவரும் கருதிய நிலையில், தோனியின் ரசிகர்கள் சென்னை அணி எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அங்கு மகேந்திர சிங் தோனியை காண கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் என்றால் மற்ற வெளிமாநில மைதானங்களில், அந்த மாநில அணியின் ரசிகர்கள் கூட தோனியின் ரசிகர்களாக இருந்து அவருக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். இதனை மற்ற அணி வீரர்கள் கூட நாங்கள் எங்கள் சொந்த மைதானத்தில் தான் விளையாடுகிறோமோ? அல்லது சென்னையில் விளையாடுகிறோமோ? என்ற கேள்வி எழும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

ஆனால் இவை அனைத்துமே தோனி விளையாடும் வரைதான் என்றும் தோனியின் ஓய்வுக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவா கூறி இருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது
“மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு அறிவித்துவிட்டால் சிஎஸ்கே அணிக்கான ரசிகர்கள் பாதி அளவு குறைந்து விடுவார்கள். அவர்கள் மற்ற மாநில மைதானங்களில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிகளுக்கு வர மாட்டார்கள்.

- Advertisement -

தோனிக்கு தற்போது 42 வயது ஆவதால், அவரால் அடுத்த சீசனில் விளையாட முடியாது. அடுத்த சீசனில் அவர் விளையாடினாலும் அவரது விரலில் அல்லது எங்காவது சிறு காயம் ஏற்பட்டால் கூட முகத்தில் வெளிப்படையாகவே தெரிந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் சென்னை அணி ரசிகர்களுக்கு அறிவார்ந்த ரசிகர்கள் என்று மற்றொரு பெயர் உண்டு.

இதையும் படிங்க:தோனி ஒரு வேளை ஓய்வை அறிவித்தால் என்ன பண்ணுவீங்க ஆர்சிபி.. இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க.. வருத்தம் தெரிவித்த மைக்கேல் வாகன்

சிஎஸ்கே ரசிகர்கள் பெரும்பாலானோர் மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் என்பது உண்மைதான். ஆனால் தோனியின் ஓய்வுக்குப் பிறகு ரசிகர்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. சென்னை என்றுமே எங்கள் அணி அதில் யார் விளையாடினாலும், விளையாட விட்டாலும் எங்களது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்போம் என்று ரசிகர்கள் சேவாக்கின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles