தோனி ஒரு வேளை ஓய்வை அறிவித்தால் என்ன பண்ணுவீங்க ஆர்சிபி.. இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க.. வருத்தம் தெரிவித்த மைக்கேல் வாகன்

சென்னை மற்றும் பெங்களூர் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஏமாற்றம் அளிக்கும் விதமாக சிஎஸ்கே இந்தத் தொடரிலிருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பிறகு மகேந்திர சிங் தோனி பெங்களூர் அணி வீரர்களுக்கு கை கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. ஆனால் இது மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஆட்டமாக இருப்பதால் தோல்வி அடைந்த விரக்தியில் கை கொடுக்க வரவில்லை என்று ஒரு தரப்பில் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் உண்மையில் மகேந்திர சிங் தோனி போட்டி முடிந்த பிறகு வீரர்களுடன் கை கொடுப்பதற்காக காத்திருந்தார். ஆனால் ஆர்சிபி வீரர்கள் போட்டி முடிந்த பிறகு கொண்டாட்டத்திலேயே அதிக நேரம் ஈடுபட்டிருந்ததால் காத்திருந்த தோனி அதன் பிறகு பெவிலியனில் இருந்த ஆர்சிபி வீரர்களிடம் கை கொடுத்து விட்டு ட்ரெஸ்ஸிங் ரூமை நோக்கி சென்று விட்டார்.

- Advertisement -

இதனால் தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் மற்றும் அணி வீரர்கள் ஆகியோர் காத்திருந்து ஆர்சிபி வீரர்களிடம் கை கொடுத்து விட்டு அதற்குப் பிறகு ட்ரெஸ்ஸிங் ரூம்மை நோக்கி திரும்பினர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பெங்களூர் அணி வீரர்கள் தோனிக்கு சரியான மரியாதை கொடுக்காமல் அவமரியாதை செய்து விட்டதாக புகார்கள் எழுப்பியுள்ளார்.

இது குறித்து மைக்கேல் வாகன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு விரிவாகக் கூறும்பொழுது
” உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நீங்கள் தோற்றால் கூட எதிரணி வீரர்களுடன் கைகுலுக்கி செல்ல வேண்டும். இதுதான் மரியாதை. அப்போதுதான் நமக்கு இருந்த பகை முடிக்கப்பட்டதாக அர்த்தம் கொள்ளப்படும். இது மகேந்திர சிங் தோனிக்கு ஒருவேளை கடைசி போட்டியாக இருந்திருந்தால் பெங்களூர் அணி வீரர்கள் கட்டாயம் கை கொடுத்திருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் அது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை விட மகேந்திர சிங் தோனி போன்ற ஒரு ஜாம்பவான் கையை குலுக்க காத்துக் கொண்டிருக்க வேண்டும். கையை கொடுத்துவிட்டு அதற்கு பின்னர் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொண்டாடி இருக்கலாம். யாரும் எதுவும் கூறப்போவது கிடையாது.

இதையும் படிங்க:தோல்விக்கு காரணமே சிவம் தூபேதான்.. ஆறுச்சாமினு அவர உசுப்பேத்தி கடைசியில் இப்படி பண்ணிட்டாரே.. கோபத்தில் ரசிகர்கள்

ஒருவேளை நீங்கள் அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று விட்டார் என்ற அறிவிப்பு வந்தால் அப்போது நீங்கள் என்ன செய்ய என்ன செய்வீர்கள்? வருத்தம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை. தோனிக்கு மரியாதை செய்ய தவறிவிட்டோம் என்று ஆர்சிபி வீரர்கள் வருத்தமடைய கூடும். எனவே முதலில் கை கொடுத்து விட்டு அதற்குப் பிறகு கொண்டாடுங்கள்” என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles