விராட் கோலியே பரவால்ல.. எங்களுக்கு இவர் தான் ரொம்ப தலைவலி கொடுப்பாரு – ஆஸி முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். அதில் சில பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளனர். அந்த வகையில், தான் எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவரை பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின் சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் களத்தில் நின்று எதிரணி பவுலர்களை சோர்வடையச் செய்வதில் பெயர் பெற்றவர். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவரது தடுப்பாட்டமும், விக்கெட்டை எளிதில் விட்டுக்கொடுக்காத தன்மையும் பலமுறை ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து டிம் பெயின் பேசும்போது, “இந்திய பேட்ஸ்மேன்களில் செதேஷ்வர் புஜாராதான் எங்களுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியவர். அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று, விக்கெட்டை எடுப்பதற்கான வாய்ப்பை கொடுக்காமல் இருப்பார்” என்று புஜாராவை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles