இதுதான் கடைசி.. விராட் கோலி எடுத்த திடீர் முடிவு – 2027 உலகக் கோப்பை குறித்து சொன்ன வார்த்தைகள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2027 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் பயணம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தொடங்குகிறது.

- Advertisement -

கோலி ஏற்கனவே 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் விளையாடிய அவர், தற்போது தனது 5-வது ஒருநாள் உலகக் கோப்பையை எதிர்நோக்குகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 54 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரராக இருக்கும் கோலி, 302 இன்னிங்ஸ்களில் 14,941 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 2027 உலகக் கோப்பை வெளிநாட்டு சூழலில் நடைபெறுவதால், 50 ஓவர் உலகக் கோப்பையின் உடல் மற்றும் மன ரீதியான சவால் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து விராட் கோலி கூறும்போது, “இந்தியாவுக்காக நான் விளையாடப் போகும் கடைசி உலகக் கோப்பை இதுதான். அதுதான் எனக்கு மிகப்பெரிய உந்துதல். என்னிடம் இருப்பதை எல்லாம் களத்தில் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். உலகக் கோப்பையை வெல்வதுதான் இலக்கு; அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய நான் முழுமையாக தயாராக இருக்கிறேன். 50 ஓவர் உலகக் கோப்பையின் தீவிரம் வேறு எந்த போட்டியையும் விட அதிகம். 10 போட்டிகளில் டி20 போட்டியின் தீவிரத்தில் விளையாட வேண்டும். ஒரு நாளில் இரண்டரை டி20 போட்டிகளை விளையாடுவது போன்ற நிலை இருக்கும். வெளிநாட்டு சூழ்நிலையில் 10 போட்டிகளிலும் அந்த தீவிரத்தை தொடர்ந்து வைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். அது உடல்ரீதியாகவும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles