டக் அவுட்டில் மோசமான சாதனையை நெருங்கும் கோலி.. சர்வதேச கிரிக்கெட்டில் இத்தனை முறை டக் அவுட்டா.? ஆச்சர்யத் தகவல்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடருக்கு மத்தியில், கோலியின் சர்வதேச டக் அவுட் எண்ணிக்கை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 42 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ஜாகீர் கான் 43 டக் அவுட்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 42 டக் அவுட்களுடன் இரண்டாவது இடத்திலும், இஷாந்த் சர்மா 40 டக் அவுட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 37 டக் அவுட்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் ரோஹித் சர்மா 36, அனில் கும்ப்ளே 35, சச்சின் டெண்டுல்கர் 34 டக் அவுட்களுடன் உள்ளனர்.

- Advertisement -

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜாகீர் கானை விட விராட் கோலி ஒரே ஒரு டக் மட்டுமே குறைவாக வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள கோலி, இந்த விரும்பத்தகாத பட்டியலிலும் முதலிடத்தை நெருங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles