சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடருக்கான அடுத்த ஏலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, அணியின் தற்போதைய வீரர்களில் யாரைத் தக்கவைக்க வேண்டும், யாரை விடுவிக்க வேண்டும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வீரர்கள் தக்கவைப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் சில முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் கூறும்போது, “வரவிருக்கும் ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மேத்யூ ஷார்ட், ஸாக் ஃபௌல்கஸ், பிரசாந்த் வீர், மாட் ஹென்றி ஆகியோரை விடுவிக்க வேண்டும். அதேபோல் கார்த்திக் ஷர்மாவையும் விடுவித்துவிட்டு, குறைந்த விலைக்கு மீண்டும் ஏலத்தில் எடுக்கலாம். கடந்த கால ஏலங்களில் செய்த தவறுகளை இந்த முறை திருத்திக்கொண்டு, அணியின் எதிர்கால வெற்றிக்கு ஏற்ற வகையில் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

