ஹர்திக் இந்த விஷயத்தில் ரொம்ப மோசமானவர்.. ஆனா பஞ்சாப் டீமில் இந்த பிரச்னை இருக்காது – இந்திய முன்னாள் வீரர்

ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கும் மாறியுள்ளனர்.

- Advertisement -

இந்த வர்த்தகம் குறித்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் திறன் மற்றும் கேப்டன்சி குறித்து சடகோபன் ரமேஷ் சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து சடகோபன் ரமேஷ் கூறும்போது, “இந்த வர்த்தகம் ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த டிரேட்களில் ஒன்று. இருவருமே தலைசிறந்த வீரர்கள். ஹர்திக்கைப் பொறுத்தவரையில் உடற்தகுதி மட்டுமே பிரச்சினையாக உள்ளது. முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர் அசாத்தியமான வீரராக இருப்பார். நான் எப்போதுமே ஹர்திக்கை சிறந்த வீரராகப் பார்த்திருக்கிறேன். ஆனால் கேப்டனாக அவர் மோசமானவராகவே இருந்திருக்கிறார். எனவே பஞ்சாப் அணிக்கு கேப்டன் பொறுப்பில்லாமல் ஒரு வீரராக அவர் செல்வது மிகப்பெரிய பலமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles