நான் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.. ஸ்டிரைக் ரேட் எனக்கும், எனது அணிக்கும் மிகவும் முக்கியம்.. வெற்றிக்குப் பின்னர் விராட் கோலி பேச்சு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சிறப்பாக செயல்பட்ட அவரே இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். போட்டிக்கு பிறகு வெற்றிக்கான காரணங்கள் குறித்து முக்கிய கருத்துக்களை விராட் கோலி பேசி இருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளஸ்சிஸ் 9 ரன்களில் வெளியேறினாலும், விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அவருக்கு பட்டிதார் 55 ரன்கள் உடன் பார்ட்னர்ஷிப் கொடுக்க, மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என 92 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த ரன்களை அவர் 195.74 ஸ்ட்ரக்ரேட்டில் விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசி கட்டத்தில் கிரீன் 27 பந்துகளில் 46 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிதரப்பில் ஹர்சல் பட்டேல் நான்கு ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்குப் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி பெங்களூர் அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் நான்கு ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி போட்டி குறித்து கூறியதாவது
“என்னை பொருத்தவரை அளவை விட தரம் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் புரிதல்கள் உங்களை குறைவாக பயிற்சி செய்ய அனுமதிக்கும். கடந்த காலங்களில் நான் செய்ததை மீண்டும் சிறப்பாக செய்யவும், ஒரு பேட்ஸ்மேன் ஆக எந்த விஷயத்தில் நான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறேன்.

நான் இன்றைய போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஆடினேன். இதற்காக நான் ஸ்பெஷல் பயிற்சிகள் எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களில் விளையாடியதை மட்டும் சிந்தித்துப் பார்த்தேன். ஸ்பின்னர்களுக்கு எதிராக குறிப்பிட்ட திசையில் விளையாடுவதற்கு அந்த ஷாட் மிகவும் முக்கியமாக இருக்கிறது. நான் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நாங்கள் இதற்கு முன்னரே பேசி இருக்கிறோம்.

இதையும் படிங்க:நாங்க வந்துட்டு இருக்கோம்.. எங்க ஐபிஎல் கோப்பைக்காக.. பஞ்சாப்பை வெளியேற்றிய ஆர்சிபி.. 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

எனக்கும், எங்கள் அணிக்கும் ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக ஆகிறது. நமக்கு நாம் நேர்மையாக இருப்பது தான் வரும் போட்டிகளில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல ஒரே வழி” என்று கூறி இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles