சேப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரால் எழுந்த சர்ச்சை.. அப்போ எல்லாமே ஸ்கிரிப்ட்டா.? ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் இருந்த கேள்வி

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதல் பிளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்று இரண்டாவது அரை இறுதி போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் ஆன ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரின் முகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரின் பிளே ஆப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடம்பெற்றன. இதில் முதலில் நடைபெற்ற பிளே ஆப் போட்டியில் கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

அதற்குப் பிறகு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது பிளே ஆப் சுற்றுத் தகுதி பெற்றது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே வெற்றி பெறும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதும்.

இந்த சூழ்நிலையில் வருகிற இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நிலையில் கொல்கத்தா மற்றும் சன் ரைசர்ஸ் அணி கேப்டன்களின் முகம் பொறிக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போது ஐபிஎல் என்பது சூதாட்டம் தானா? இது எல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்டதா? என்பது போன்ற குழப்பங்கள் தற்போது ரசிகர்களிடையே நீடித்து வருகிறது.

- Advertisement -

அப்பொழுது இந்த ஐபிஎல் தொடரில் இந்த அணிதான் வெற்றி பெற வேண்டும் என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டதா? என்ற குழப்பமும் தற்போது ரசிகர்களிடையே எழுந்து வரும் வேளையில், இதன் உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது மைதானம் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம் மைதானங்களின் பேனர்கள் சரியாக உள்ளதா? என்று டெஸ்ட் செய்வதற்காக எதேச்சையாக இரு அணி வீரர்களின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தினேஷ் கார்த்திக்கின் இந்த இரு குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி பேட்டி

அதாவது இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் அந்த பேனரில் கம்மின்ஸ் புகைப்படத்துக்கு பதிலாக சஞ்சீவ் சாம்சன் புகைப்படம் மாற்றி அமைக்கப்படும். கடந்த ஆண்டு கூட ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக மோடி மைதானத்தில் “சாம்பியன் குஜராத்” என்று எல்இடி மைதானத்தில் டெஸ்ட் செய்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles