தினேஷ் கார்த்திக்கின் இந்த இரு குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பரிதாபமாக தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

- Advertisement -

இந்த சீசனில் தோல்வியின் விளிம்பில் இருந்து தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி, எதிர்பாராத விதமாக பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது.

- Advertisement -

இது அணி வீரர்களை தாண்டி ஆர்சிபி ரசிகர்களை பெரும் வருத்தமடைய செய்துள்ளது. ஆர்சிபி அணியின் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டோடு ஓய்வு பெற்று விடுவார் என்று முன்னரே அறிவித்திருந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை அளிக்க வேண்டும் என்று பெங்களூர் வீரர்கள் விரும்பினர்.

- Advertisement -

ஆனால் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை என்பது மற்றும் ஒரு சோகம். 2022ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும், 2022ஆம் ஆண்டும் மிகச் சிறப்பாக விளையாடி பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்தார். இதன் எதிரொலியாக 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது.

பினிஷராக களம் இறங்கி அணியின் ரன் ரேட்டை உயர்த்துவதில் தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பாக விளங்கி இருக்கிறார். ராஜஸ்தான் அணியுடன் போட்டிக்குப் பிறகு ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி தினேஷ் கார்த்திக்கின் இந்த இரண்டு குணங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறி இருக்கிறார். அதற்கு முன்பு பெங்களூரு அணி விளையாடிய விதம் குறித்தும் தோல்வியிலிருந்து அணி வீரர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டதாகவும், இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு தினேஷ் கார்த்திக் குறித்து தனது கருத்தை தெரிவித்த விராட் கோலி
“2022ஆம் ஆண்டு நான் சரியாக விளையாடாத போது தன்னம்பிக்கை இழந்து காணப்பட்டேன். அப்போது தினேஷ் கார்த்திக் இரண்டு முறை என்னிடம் அமர்ந்து அதற்கு நேர்மையான விளக்கத்தை கொடுத்தார். விளக்கம் கொடுத்தது மட்டுமில்லாமல் அதற்கு தகுந்தவாறு என்னை தெளிவு படுத்தினார். அவரின் தைரியமும், நேர்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்கு எது மனதில் பட்டதோ அதை வெளிப்படையாக பேசக்கூடிய நேர்மையான நபர்.

இதையும் படிங்க:இப்படிப்பட்ட பிளேயர்லா டீமுக்கு தேவையே இல்லை.. அவர் ஒருவருக்காக ஒட்டுமொத்த அணியையும் மாற்ற முடியாது- தோனி பரபரப்பு பேட்டி

இந்த இரண்டு குணங்களும் எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்” என்று விராட் கோலி கூறி இருக்கிறார். அடுத்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெறும் நிலையில் அடுத்த ஆண்டிலாவது ஆர்சிபி நிர்வாகம் திறமையான வீரர்களை எடுத்து அடுத்த முறையாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles