ரிங்கு சிங், கேஎல் ராகுலை இந்த காரணத்தினால்தான் நாங்கள் தேர்வு செய்யவில்லை.. விளக்கம் கூறும் அஜித் அகர்கர்

ஜூன் மாதம் நடக்கப்போகும் டி20 உலக கோப்பைக் காண இந்திய அணியை சில தினங்களுக்கு முன்பாக இந்திய தேர்வுக் குழு வாரியம் அறிவித்தது.

- Advertisement -

அறிவித்தது முதல் இந்திய அணி குறித்து கலவையான விமர்சனங்களும், சர்ச்சைகளும் இருந்தன. இதில் முக்கியமாக ஃபினிஷிங் ரோலில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங்கை சேர்க்காதது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

- Advertisement -

பினிஷிங் ரோலில் மகேந்திர சிங் தோனிக்கு நிகராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று அனைவரும் பாராட்டி வரும் வேளையில்,அவரது பெயர் நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் வேகப்பந்து வீச்சை பொருத்தவரையில் தற்போது ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நடராஜனை எடுக்காததும் மிகப்பெரிய சர்ச்சையானது.

- Advertisement -

இது குப்பையான தேர்வு என்றும், இந்த தேர்வில் உடன்பாடு சுத்தமாக இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது ரிங்கு சிங் மற்றும் கே எல் ராகுலை நீக்கம் செய்தது குறித்து பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் பொழுது
“டி20 உலக கோப்பையில் ரிங்கு சிங்கை தேர்வு செய்யாமல் விட்டதுதான் கடினமான ஒன்றாக இருந்தது. அவர் எந்த ஒரு தவறுமே செய்யவில்லை. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்றால் அதுதான் உண்மை.

- Advertisement -

ஆனால் இந்த காம்பினேஷனில் அவரை சேர்க்க முடியவில்லை. மேலும் கே.எல் ராகுலை சேர்க்காததும் திறமையின் அடிப்படையில் இல்லை. அவரும் விளையாட வேண்டிய இடத்தின் அடிப்படையில் தான் இறுதியாக முடிவு செய்யப்பட்டது. எங்களுக்கு மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் கே எல் ராகுல் டாப் ஆர்டர் வரிசையில் விளையாடக் கூடியவர்.

இதையும் படிங்க:உங்களைப் பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது.. நீங்கள் கிரிக்கெட் விளையாடவே தகுதியற்றவர்.. தீபக் சகாரை விமர்சிக்கும் ரவி சாஸ்திரி

அதனால்தான் அவரை நீக்குவது மிக கடினமாக இருந்தது. அதேபோல மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் மற்றும் பண்ட் ஆகியோரும் இதன் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டார்கள்” என்று கூறி இருக்கிறார். இதன் அடிப்படையிலேயே இருவரும் தேர்வு செய்யப்படவில்லை என்ற விளக்கத்தை அளித்துள்ளனர். மேலும் நான்கு ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து கூறும் பொழுது அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்போது நான் அது குறித்து எதுவும் பேசப் போவதில்லை. உங்களுக்கு உலகக்கோப்பை தொடர் நடைபெறும் போது புரியும் என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles