இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் தனது அணி வீரர்களைப் பற்றி முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்.
இந்தப் போட்டியில் டாசை இழந்த சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. இதன்படி பேட்டிங் தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் பிரபு சிம்ரன் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் அணி தரப்பில் நடராஜன் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே 215 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது
“இது ஒரு அற்புதமான ஆட்டம். நாங்கள் இங்கு ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்றுள்ளோம். இது மிகச் சிறப்பாகவும், அதே வேளையில் ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த சீசனில் நிறைய வீரர்கள் வருவதால் நான் அவர்களை அறிய முடியவில்லை. ஆனால் நாங்கள் வேடிக்கையாக சிறந்த கிரிக்கெட்டை தற்போது விளையாடியுள்ளோம். இந்த சீசனில் அபிஷேக் ஷர்மா அற்புதமாக விளையாடியுள்ளார்.
நான் அவருக்கு பந்து வீசுவதை விரும்பமாட்டேன். அவர் சுழற் பந்துவீச்சு, வேகபந்து வீச்சு என இரண்டையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்குகிறார். இப்படி இரண்டு பந்து வீச்சுக்கும் எதிராக சுதந்திரமாகவும், பயமின்றியும் விளையாடுவதை பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது. நித்தீஷ் ரெட்டி ஒரு தரமான கிளாஸ் பிளேயர். வயதுக்கு மீறிய அனுபவம் அவரிடம் இருக்கிறது.
இதையும் படிங்க:பஞ்சாபை வெளுத்த குட்டி யுவராஜ் சிங்.. 28 பந்தில் 66 ரன்கள்.. 2வது இடத்திற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்.. தப்பித்த ஆர்சிபி
அவர் டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு தகுதியானவர். உண்மையில் இந்த அனுபவம் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இறுதிப்போட்டியில் இதுவரை விளையாடியதில்லை. அது எந்த அணிக்கு எதிரான ஆட்டம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். நான் நிஜமாகவே நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறேன். வரவிருக்கும் விஷயங்கள் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்

