பஞ்சாபை வெளுத்த குட்டி யுவராஜ் சிங்.. 28 பந்தில் 66 ரன்கள்.. 2வது இடத்திற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்.. தப்பித்த ஆர்சிபி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 69ஆவது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி பந்து வீசிய சன்ரைசர்ஸ் அணியினர் பஞ்சாப் அணியினருக்கு பந்து வீச முடியாமல் தினறினர். தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் 27 பந்துகளில் 46 ரன்களும், பிரபு சிம்ரன் 45 பந்துகளில் 71 ரன்களும் குவித்தனர். இதில் நான்கு சிக்ஸர்களும் அடங்கும் அதற்குப் பின்னர் களமிறங்கிய ரூசோ 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு களமிறங்கிய கேப்டன் ஜீத்தேஷ் சர்மா 15 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 32 ரன்கள் குவித்தார். பந்துவீச்சு தரப்பில் நடராஜன் நான்கு ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கியது.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் இந்த போட்டியில் ரன் ஏதுமின்றி முதல் பந்த்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இதனால் முழு பொறுப்பை எடுத்துக் கொண்ட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குட்டி யுவராஜ் சிங் என்று அழைக்கப்படும் அபிஷேக் ஷர்மா பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சுழற் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என இரண்டையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய ராகுல் திருப்பதி 18 பந்துகளில் 33 ரன்களும், நித்திஷ் ரெட்டி 25 பந்துகளில் 32 ரன்களும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாஸன் 26 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்சர்களுடன் 42 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 215 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமும் தற்போது புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதையும் படிங்க:நாம் செய்கின்ற செயலுக்கு உண்மையாக இருந்தால் போதும்.. கடவுள் நமக்கு ஒரு திட்டம் வைத்திருப்பார்.. வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி

இதன் மூலம் இன்று இரவு நடைபெறுகிற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தினால் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி சன்ரைசர்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு வரும். அப்படி மூன்றாவது இடத்திற்கு வந்தால் நான்காவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியுடன் திரும்ப பிளே ஆப் சுற்றில் மோதும். ஏற்கனவே பெங்களூர் அணியுடன்தான் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles