நடராஜன் ஒரு கடின உழைப்பாளி.. ஆனால் அவர் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. புவனேஸ்வர் குமார் பேட்டி

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப் போட்டியில் வெற்றி பெற்ற பின் தமிழக வீரர் நடராஜனின் பந்துவீச்சுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியில் டிராவீஸ் ஹெட் 32 பந்துகளில் 89 ரன்களும், அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 46 ரன்களும், நிதிஷ்குமார் ரெட்டி 27 பந்துகளில் 37 ரன்களும், ஷாபாஷ் அஹமது 29 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். டெல்லி அணி தரப்பில் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு பின்னர் களமிறங்கிய டெல்லி அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபார பந்துவீச்சினால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்தது. அந்த அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான மெகர்க் 18 பந்துகளில் 5 பௌண்டரிகள், ஏழு சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் நான்கு ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இப்போட்டி முடிந்த பின் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் நடராஜன் பந்துவீச்சுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“மிகப்பெரிய ரன் இலக்கைச் சேஸ் செய்யும்போது எங்களது பந்து வீச்சிலும் ரன்கள் செல்லும் என்பது தெரியும். ஆனால் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

- Advertisement -

நடராஜனின் யார்க்கர் குறித்து அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு கடின உழைப்பாளி ஆனால் மிக அமைதியான மனிதர். சில நேரங்களில் அவரது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அவர் ஒரு சிறந்த மேட்ச் வின்னர். இதே போல எங்களது பேட்டிங்கும் தற்போது சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் பந்து வீசும் போது எந்த அழுத்தத்திற்கும் நாங்கள் உல்லாவதில்லை.

இதையும் படிங்க:பனிப்பொழிவு எங்களை ஏமாற்றி விட்டது.. இவரைப் போன்ற வீரர்தான் எங்களுக்கு தேவை.. தோல்வி குறித்து கூறும் பண்ட்

இந்த ஆடுகளத்தில் 220 முதல் 23 ரன்கள் குறைவானது என்று நினைத்தோம். அதற்கேற்றார் போல் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆடுகளத்தைப் பற்றி பெரிதும் யோசிக்காமல் நமது வேலையை மட்டுமே செய்ய வேண்டும். வலைப் பயிற்சியில் அபிஷேக் ஷர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோருக்கு பந்து வீசும் போது எங்கே செல்கிறது என்பது குறித்து கவலை கொள்ளக்கூடாது. பேட்ஸ்மேன்கள் ஸ்பான்சர்சிப்பை வென்று கொடுப்பார்கள். ஆனால் பவுலர்கள்தான் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles