பனிப்பொழிவு எங்களை ஏமாற்றி விட்டது.. இவரைப் போன்ற வீரர்தான் எங்களுக்கு தேவை.. தோல்வி குறித்து கூறும் பண்ட்

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தோல்வி அடைந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தோல்வி குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி 38 பந்துகளில் 131 ரன்கள் குவித்தது. இதற்குப் பின்னர் களம் இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் சபாஷ் அகமது ஜோடி 47 பந்துகளில் 67 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஹைதராபாத் அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டிய ஹைதராபாத் அணியை டெல்லி அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தடுத்து நிறுத்தி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு இந்த மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி வார்னர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரர் மெக்கர்க் 18 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில், ரிஷப் பண்ட் கடைசி கட்டத்தில் போராடி 35 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இருப்பினும் டெல்லி அணி கடைசியாக 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதனால் சன்ரைசர்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் பன்ட் கூறும் பொழுது
“நான் டாஸ் ஜெயித்து பந்துவீச்சை தேர்வு செய்ததற்கு காரணம் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு வரும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த போது பனிப்பொழிவு வரவில்லை. சன்ரைசர்ஸ் அணியை 220 முதல் 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும்.

- Advertisement -

மேலும் நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பந்து நின்று வந்தது. 260 ரன்கள் முதல் 270 ரன்கள் வரை இலக்காக இருந்தால் நீங்கள் ஆட்டம் முழுவதும் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். எங்கள் அணியில் மெக்கர்க் அருமையாக விளையாடினார். அவரைப் போன்ற ஒரு வீரர்தான் எங்கள் அணிக்கு தேவை.

இதையும் படிங்க:தோனி இல்லை.. ஜடேஜாதான் சிஎஸ்கேவின் முக்கியத்தூண்.. ஏன் தெரியுமா? விளக்குகிறார் அம்பத்தி ராயுடு

அவர் ஒரு வீரராக செய்வதை நாங்கள் அணியாக செய்ய வேண்டும். எனவே அடுத்த போட்டியில் எந்தப் பகுதியில் நாங்கள் முன்னேற வேண்டுமோ அதனை சரி செய்து மீண்டும் வலுவாக திரும்புவோம் என்று நம்பிக்கை உள்ளது” என்று பன்ட் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles