இரண்டு நல்ல பந்துகள் மட்டுமே எனது குறியாக இருந்தது.. இது டி20 கிரிக்கெட் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற புவனேஸ்வர் குமார் பேட்டி

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய சன்ரைசர்ஸ் அணியின் புவனேஸ்வர் குமார் வெற்றிக்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவிக்க, இதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியினர் ஹெட் 44பந்துகளில் 58 ரன்களும், நித்திஷ் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்களும், கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார்கள். இதனால் சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்களும், ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்களும் குவித்தார்கள். கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட, அற்புதமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி திரில்லர் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி குறித்து அவர் கூறிய பொழுது
“என்னுடைய இயல்பான ஆட்டமே இதுதான் என்று நினைக்கிறேன். கடைசி ஓவர் குறித்து எதுவுமே சிந்திக்கவில்லை. கடைசி ஓவரில் எப்படி பந்து வீசுவது என்பது குறித்து விவாதமும் செய்யவில்லை. செயல்பாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினேன்.

- Advertisement -

இரண்டு நல்ல பந்துகளை வீசுவது என்னுடைய திட்டமாக இருந்தது. இது டி20 கிரிக்கெட் போட்டி என்பதால் மாற்றம் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் நான் அது குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. ஆரம்பத்தில் இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. தனிப்பட்ட முறையில் நான் எதையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இன்று அதிர்ஷ்டவசமாக எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தது.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் விளையாடுவது எவ்வாறு உள்ளது.? பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. கூலாக பதில் அளித்த ரோஹித் சர்மா

ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் என்னுடைய செயல்முறை வேறு மாதிரி இருந்தது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு பின்னர் என்னுடைய சிந்தனை மாறி இருக்கிறது என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கிறார். இந்த போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி ஆறாவது போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles