ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் விளையாடுவது எவ்வாறு உள்ளது.? பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. கூலாக பதில் அளித்த ரோஹித் சர்மா

சில தினங்களுக்கு முன்பு 2024 டி20 உலக கோப்பை காண இந்திய அணி இந்திய தேர்வு குழு வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

உலகக் கோப்பை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இருவரும் சுவாரசியமாக பதில் அளித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாடுவது எவ்வாறு உள்ளது என்று ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டதற்கு மிகவும் கூலாக ரோஹித் சர்மா பதில் அளித்தது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஹர்த்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாடி வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோகித் சர்மாவிடமிருந்து ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. குஜராத் அணியில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா சிறப்பாக கேப்டன்சி செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளது.

- Advertisement -

ஆனால் அந்த முடிவு மும்பை அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் சோகத்தை கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஏழு போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. கிட்டத்தட்ட மும்பை அணி பிளே ஆப்பில் இருந்து வெளியேறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் உலகக்கோப்பை இந்திய அணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கலந்து கொண்ட அஜித் அகர்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவது எவ்வாறு உள்ளது என்று ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு ரோகித் சர்மா பதில் அளிக்கும் போது
“இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ஏற்கனவே பல கேப்டன்களுக்கு கீழ் நான் விளையாடியிருக்கிறேன். அதனால் கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக விளையாடுவது என்பது எனக்கு புதிய விஷயம் அல்ல. நம்மிடம் ஒரு அணி என்ன எதிர்பார்க்கிறதோ அதனை மட்டும் சிறப்பாக செய்ய வேண்டும். அதனை நான் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறப்பாக செய்து வருகிறேன்” என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரிங்கு சிங், கேஎல் ராகுலை இந்த காரணத்தினால்தான் நாங்கள் தேர்வு செய்யவில்லை.. விளக்கம் கூறும் அஜித் அகர்கர்

மிகவும் கூலாக பதில் அளித்துள்ள ரோஹித் சர்மாவின் இந்த பதில் தற்போது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. இந்திய அணியில் ஏற்கனவே தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு கீழ் ரோஹித் சர்மா விளையாடி இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு கீழ் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles