சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்குமா குட்டி ஹர்திக் பாண்டியாவுக்கு.? தீபக் சாகர் காயம் காரணமாக விலகல்.. பஞ்சாப் போட்டியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் ஐந்து போட்டியில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.

- Advertisement -

இந்த முக்கியமான நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய வீரர்கள் காயம் காரணமாகவும், சொந்த பிரச்சினைக்காகவும் விலகி இருப்பது சிஎஸ்கேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன தீபக் சகார் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது இரண்டு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

- Advertisement -

இதேபோன்று வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிக்குர் ரஹ்மான் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக, ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி வங்கதேசம் சென்று விட்டார். மேலும் நன்றாக பந்து வீசிக் கொண்டிருந்த துஷார்தேஷ் பாண்டேவுக்கும் தற்போது காய்ச்சல் ஏற்பட்டு அவரும் ஓய்வில் இருக்கிறார்.

- Advertisement -

இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே நிர்வாகம் யாரை களம் இறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் எத்தனை வீரர்கள் காயம் அடைந்தாலும் அவர்களுக்கு பதிலாக தகுந்த மாற்று வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது தீபக்சாகர் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர் கேர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறார். இவர் 2023ஆம் ஆண்டு இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே கலக்கக் கூடியவர்.

- Advertisement -

இவரை உள்ளூர் கிரிக்கெட்டில் குட்டி ஹர்திக் பாண்டியா என்று தான் அழைப்பார்கள். திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் இவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாய்ப்புகளை வழங்காமல் வீணடித்து வருகிறது. இனிவரும் போட்டிகளில் இவருக்கு சரியாக வாய்ப்பு வழங்கினால் இவர் ஹர்திக் பாண்டியா போல் இந்தியாவுக்கும் ஒரு எதிர்கால ஆல் ரவுண்டாக கிடைப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை வென்றது கடினம்.. காரணம் என்ன.?

மேலும் வங்கதேச வீரர் முஸ்தபிக்குர் ரகுமானுக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ரிச்சர்டு க்லீசன் என்பவரை சிஎஸ்கே நிர்வாகம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது. மேலும் பேட்டிங்கிலும் எந்த வீரர் காயம் அடைந்தாலும் அவருக்கு தகுந்த மாற்று வீரர் இருப்பதால் அது குறித்த கவலை கொள்ளத் தேவையில்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles