பும்ரா பந்தில் சிக்சர் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.. ஆனாலும் வருத்தமாக உள்ளது.. போட்டிக்கு பின்னர் அசுட்டோஸ் சர்மா பேட்டி

பும்ரா பந்தில் சிக்சர் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்று மும்பை அணிக்கு மரண பயத்தைக் காட்டி பஞ்சாப் அணி வீரர் அசுட்டோஸ் சர்மா போட்டிக்கு பின்னர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற மெகா இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி.

- Advertisement -

தொடக்க வீரர்கள் மிக விரைவிலேயே ஆட்டம் இழந்ததால், சிக்கலில் மாட்டிக் கொண்ட பஞ்சாப் அணியை வழக்கம் போல அசிட்டோஸ் சர்மா மற்றும் சஷாங்க் சிங் ஆகியோர் அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். 77 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணியில் அசிட்டோஸ் சர்மா நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட இவர் இரண்டு பவுண்டரிகள், ஏழு சிக்சர்கள் என 61 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் மும்பை அணிக்கு மரண பயத்தை காட்டியவர் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் 13வது ஓரை பும்ரா வீச வந்தார். அப்போது அவர் வீசிய ஒரு பந்து நோ பால் ஆக அமைய, அதற்கு அடுத்த ப்ரீஹிட் பந்தை எதிர்கொண்டு அசிட்டோஸ் சர்மா ஸ்கொயர் லெக் பின்னால் ஒரு பந்தை சிக்சராக விளாசினார். இதற்கு அடுத்த போட்டி முடிந்த பிறகு பும்ராவின் பந்து வீச்சில் சிக்சர் அடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்றும் அது தற்போது நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் விரிவாக கூறும்பொழுது
“இந்தப் போட்டியில் என்னுடைய செயல்பாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினேன் என்று நினைக்கிறேன். அவரது பந்துவீச்சை எதிர்கொண்டு ஸ்வீப் ஷாட் சிக்சர் அடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்காக நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன். பும்ரா வீசிய ஒரு பந்தும் சரியாக அமைய அதனை சிக்சருக்கு விளாசினேன். தற்போது அந்த கனவு நிறைவேறி விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க:கையெழுத்து போடச் சொல்லி விராட் கோலி என்னை மிரட்டினார்.. அது எனக்கு மன வலியை கொடுத்தது.. மனம் திறக்கும் கே எல் ராகுல்

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடினேன் ஆனால் அது நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார். ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles