தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக கலக்கிக் கொண்டிருக்கும் கே எல் ராகுல் ஐபிஎல்லில் முதன் முதலில் களம் இறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகதான்.
சில ஆண்டுகள் பெங்களூரு அணிக்காக விளையாடிய நிலையில் அதன் பிறகு பஞ்சாப் அணியில் கேப்டனாக விளையாடினார். அந்த அணிக்காக ஓபனிங்கில் இறங்கி கலக்கிக் கொண்டிருந்த கேஎல் ராகுல் அதன் பிறகு 2022ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி ஆரம்பிக்கப்பட்ட பிறகு அந்த அணியில் கேப்டனாக தற்போது வரை விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவர் தான் ஆர்சிபி அணிக்காக எப்படி களம் இறங்கினேன் என்று அவரே கூறியிருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் 2014 ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் ஐபிஎல் தொடரில் விளையாடினேன். ஆனால் 2012 ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியுடன்தான் இருக்கிறேன்.
அப்போது ஒரு நட்சத்திர ஹோட்டலில் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் ஆகியோர் இருந்தார்கள். அப்போது என்னிடம் விராட் கோலி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உனக்கு ஆர் சி பி அணியில் விளையாட விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டார். என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள் ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு என்று கூறினேன். அதற்குப் பிறகு நான் விளையாட்டுக்காக கூறினேன். நீ கையெழுத்து போடுகிறாயா இல்லையா என்பதையெல்லாம் நான் கேட்கவில்லை நீ கையெழுத்து கண்டிப்பாக போட வேண்டும் என்று செல்லமாக மிரட்டினார்.
உனக்கு இந்தப் பயணம் உனக்கு நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும் என்று விராட் கோலி கூறினார். நிஜமாகவே ஆர்சிபி அணியில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அதன்பிறகு அணியில் தொடர்ந்து விளையாடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சில சூழ்நிலைகளால் என்னால் விளையாட முடியாமல் போனது. அது நம் கைகளில் எதுவும் இல்லை.
ஒரு சாதாரண வீரராக ரஞ்சி போட்டிகளில் 7,8 சீசனங்களில் நம்மால் என்ன கற்றுக் கொள்ள முடியுமோ அதனை குறைந்த காலத்திலேயே ஆர்சிபி அணியில் என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான ஆண்டு என்றால் அது 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகக் கோப்பை தோல்விதான்.
இதையும் படிங்க:டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு கடினம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை வீரர் பும்ரா பேட்டி
நான் பேட்டிங்கில் களமிறங்கி 40 ரன்கள் வரை கூடுதலாக அடித்து இருந்தால் இந்நேரம் நம் கைகளில் உலகக் கோப்பை நிச்சயம் இருந்திருக்கும். உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது எனக்கு மன வலியை தருகிறது. கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவீட்டும் அணியில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கினார்கள். அவர்களின் தலைமையில் விளையாடியது எனக்கு திருப்திகரமாக இருந்தது” என்று கூறினார்

