பும்ராவுக்கு ஓய்வு தராமல் மும்பை அணி விளையாட வைப்பது நியாயமா.? நீங்க இப்படியும் பேசுவீங்க அப்படியும் பேசுவீங்க.. விளக்கம் அளித்திருக்கும் பொல்லார்டு

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து டி20 உலக கோப்பைத்தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் இதனை பிரதானமாகக் கொண்டு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்திய அணி வீரர்களும் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஓய்வெடுத்து விட்டு திரும்பவும் டி20 உலக கோப்பையில் பங்கு பெற இருக்கின்றனர். அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அதில் அவர்கள் காயமடைவதற்கு அல்லது ஒரு விதமான மன அயிற்சிக்கோ செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

அப்படி உலகக் கோப்பையில் இடம் பெற்றிருக்கும் முன்னணி வீரர் ஏதேனும் ஒருவர் காயமடையும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு பெரும் பிரச்சனையாகவே முடியும். உதாரணமாகச் சொன்னால் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் பும்ராவை குறிப்பிடலாம். பும்ரா சமீபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்திய அணிக்கு திரும்பாமல் கடுமையாக உழைத்து கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் திரும்பினார்.

- Advertisement -

தற்போது மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் அவர், மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இழந்துவிட்ட போதிலும் அவருக்கு ஓய்வளிக்காமல் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய உலகக்கோப்பை அணியை பொறுத்தவரையில் மிக முக்கிய நட்சத்திரவேகப்பந்துவீச்சாளர் என்றால் அதில் பும்ரா ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

அர்ஸ்தீப் சிங், சிராஜ் மற்றும் கலீல் அகமது போன்ற வீரர்கள் இருப்பினும் அவர்களின் பந்துவீச்சு பார்ம் தற்போது கவலைக்குரிய வகையிலேயே அமைந்திருக்கிறது. இதனால் தற்போது மும்பை அணி நிர்வாகம் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் கூறிவரும் நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பொல்லார்டு சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதில் அவர் கூறும் பொழுது
” இந்த கேள்விக்கு பதில் சொல்லும் பொறுப்பு என்னிடம் இல்லை, இருந்தாலும் இதற்கு நான் பதில் அளிக்கிறேன். நாம் தூரமாக இருக்கும் விஷயங்களுக்கு முன்பாகவே யோசித்தால் அதில் நம் செயல்பாடுகள் தான் பாதிப்படையும். எல்லாரும் இங்கே முழு ஐபிஎல் தொடர் விளையாடுவதற்காக தான் வந்திருக்கிறோம். எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது எனவே அந்த இரண்டு போட்டிகள் முடிந்த பின்னர் மேற்கொண்டு இது குறித்து யோசிக்கலாம். ஒருவேளை உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் ஓய்வளித்து இருந்தால் நீங்கள் எங்களிடம் வேறு விதமாக கேள்வி கேட்பீர்கள்.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு திறமையான கேப்டன் தேவை.. அந்த தகுதி இவரிடம் இருக்கிறது.. யுவராஜ் சிங் ஓபன் டாக்

உங்களுக்கு உலகக் கோப்பை தான் முக்கியமா? ஐபிஎல் முக்கியம் இல்லையா? என்றும் கேட்பீர்கள். எனவே மே 17ஆம் தேதியோடு அனைத்தும் முடிந்து விடும். இதனால் அனைத்து வீரர்களும் ஓய்வெடுத்து விட்டு உலக கோப்பை தொடரில் பங்கு பெறலாம்” என்று விரிவாகவே கூறி இருந்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles