வெறும் 2 மாதம் விளையாடிவிட்டு வீடு திரும்புவது அல்ல.. சிஎஸ்கேதான் எனது பலம்.. சிஎஸ்கேதான் எனது எமோஷன்.. முதல்முறையாக பேட்டி அளித்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், பெங்களூர் அணி சிஎஸ்கேவை நான்காவது அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த சீசனில் எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டியளிக்காத மகேந்திர சிங் தோனி சென்னை அணி லீக் சுற்றில் இருந்து வெளியேறியதற்குப் பிறகு சிஎஸ்கே குறித்து தனது முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக தனது கேப்டன் பதவியை ருத்ராஜிடம் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சீசன் முழுவதுமே ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாடினார். மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தால் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களுக்காக ஏதாவது ஒரு கருத்தை முன் வைப்பார்.

- Advertisement -

மேலும் தோனியின் ஓய்வு குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கும் மைதானத்திலேயே பதில் அளித்து அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். இந்த சீசனில் அவர் பேட்டியளிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாததால் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கருத்து மேலோங்கி நின்றது. மேலும் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி விளையாட மாட்டார் என்ற தகவலும் பரவியது.

இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி லீக் சுற்றில் இருந்து சென்னை அணி வெளியேறிய பிறகு துபாயில் நடைபெற்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதில் மகேந்திர சிங் தோனி கூறும் பொழுது
“ஏற்றத்தாழ்வுகளில் எப்பொழுதுமே நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் வெற்றி பெறும்போது இதை தான் செய்வோம் என்று கூறுவது மிகவும் எளிதானது.

- Advertisement -

ஆனால் தோல்வி நேரங்களிலும் நீங்கள் அப்படியே இருந்தால் அந்த நேரத்தில்தான் உங்களுக்கான மரியாதை என்பது வெளிப்படும். சென்னை அணியுடன் ஆன எனது இணைப்பு என்பது வெறும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பவும் அது அல்ல. சென்னை அணி தான் எனக்கு ஒரு பலம், சென்னை அணிதான் எனக்கு ஒரு எமோஷன் என்று துபாய் யூ டியூப் சேனலில் பேட்டியளித்திருக்கிறார்.

இதையும் படிங்க:ஒரு தலைமுறையின் சிறந்த வீரருக்கு முடிவு இப்படி இருக்கக் கூடாது.. அதனால் தோனி இது குறித்து சிந்திக்க வேண்டாம்.. வேண்டுகோள் விடுத்த அம்பத்தி ராயுடு

தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் மகேந்திர சிங் தோனி வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவரது பேட்டிங் சீசனுக்கு சீசன் மெருகேறிக் கொண்டே வருவதால் அடுத்த சீசனிலும் அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நம்புகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles