சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும் நிலையில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றி மகேந்திர சிங் தோனிக்கு பிரியா விடை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
மகேந்திர சிங் டோனி சில வருடங்களுக்கு முன்னர் நான் ஓய்வு பெறும்போது எனது கடைசி போட்டி நிச்சயம் சென்னையில்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அதுபோலவே இந்த ஐபிஎல் சீசனில் சட்டமன்றத் தேர்தல்களினால் அகமதாபாத்தில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி தற்போது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னை ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி மகேந்திர சிங் தோனிக்கு சிறப்பான முறையில் வழி அனுப்பைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் முன்னரே லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
ஏற்கனவே தோனி காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், இதுவே அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று ஒரு தகவல் பரவி வரும் நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு மகேந்திர சிங் தோனி இந்த முடிவை எடுக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லீக் சுற்றோடு வெளியேறியது.
இதனால் மகேந்திர சிங் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவார் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் மகேந்திர சிங் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறக் கூடாது. ஒரு தலைமுறையின் மகத்தான வீரருக்கு முடிவு இப்படி அமையக்கூடாது. இதனால் தோனி நிச்சயமாக இன்னும் ஒரு சீசன் கண்டிப்பாக விளையாட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றி தோனியை சிறந்த முறையில் வழி அனுப்ப வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:ராஜஸ்தான், பெங்களூர் எலிமினேட்டர் போட்டி.. இந்த அணிதான் வெற்றி பெறும்.. அம்பத்தி ராயுடு கூறும் காரணம்
தோனி பெங்களூர் அணி உடனான கடைசி போட்டிக்கு பிறகு தனது ஓய்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் தனது ஓய்வை பொருத்தவரை தோனி யாரும் எதிர்பாராத விதத்தில்தான் அறிவிப்பார். அது சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் மகேந்திர சிங் தோனி இதே முறையைத்தான் பின்பற்றினார். இதனால் தற்போதும் சில மாதங்கள் குறித்து தனது அறிவிப்பை வெளியிடலாம் அல்லது அடுத்த சீசனும் விளையாடலாம்.

