அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான இந்திய அணியை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகி இருந்தார்.
தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவர் டி20 உலக கோப்பையில் மிகச் சிறந்த வீரராக இருப்பார் என்று ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா கூறி இருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் பங்குபெறும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியும் சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியை அறிவித்தது. அதில் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டுமே சரிசமமாக சம பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர்களில் முதல் தேர்வாக ரிஷப் பண்ட் இருந்தார். இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர்க்கிடையே போட்டி இருந்தது. ஆனால் இந்த ஐபிஎல்லில் கே எல் ராகுலை விட சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் சஞ்சு சாம்சன் பெயரரே முன்னணியில் இருந்தது.
இதுபோக கடைசியாக இந்திய அணியிலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் டி20 உலக கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று குமார் சங்கக்கரா கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
” சஞ்சு சாம்சன் ஒரு ஸ்பெஷல் சிறப்பான பிளேயர். அவர் புத்துணர்ச்சியுடன் முழு கவனத்தோடு இருக்கும்போது அவரால் செய்ய முடியாதது என்று எதுவுமே கிடையாது.
அவர் அமைதியான பண்பான மனிதர். அவர் பெரிதாக சமூக வலைதளங்களிலும் கிடையாது. இவர் தற்போதைய டி20 உலக கோப்பை அணியில் ஒரு சிறந்த வீரராக இருப்பார். இந்த ஐபிஎல் சீசனில் அவரிடம் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்ற நுட்பம் அவருக்குள் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் அவர் கவனக்குறைவாக இருப்பது போல் தெரிந்தது.
இதையும் படிங்க:மன உளைச்சலுக்கு ஆளான கேஎல் ராகுல்.. அணி உரிமையாளர் திட்டிய விவகாரம்.. கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு.. வெடிக்கும் புதிய சர்ச்சை
இந்த நிலையில் கடந்த சீசனில் அது குறித்து அவரிடம் நிறைய விவாதித்தோம். எல்லா நேரத்திலும் பயிற்சி செய்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக இருப்பதைவிட, அமைதியாக இருந்து புத்துணர்ச்சியோடு வருவது முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார். அவரது இந்த மாற்றத்தாலும், திறமையினாலும் அவர் சிறந்த வீரராக வருவார்” என்று கூறியிருக்கிறார்.

