மன உளைச்சலுக்கு ஆளான கேஎல் ராகுல்.. அணி உரிமையாளர் திட்டிய விவகாரம்.. கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு.. வெடிக்கும் புதிய சர்ச்சை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

லக்னோ அணி குவித்த 165 ரன்கள் இலக்கை வெறும் பத்து ஓவர்களிலேயே வெற்றி இலக்க ரன்களை சேஸ் செய்திருக்கிறது. அந்தப் போட்டியில் மிகவும் மந்தமாக ஆடிய கே எல் ராகுல் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதைவிட புதிய சர்ச்சை ஒன்று நேற்று வெடித்தது.

- Advertisement -

லக்னோ அணி தோல்வி அடைந்ததும் அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ரசிகர்கள் முன்னிலையில் கே எல் ராகுலை திட்டி இருக்கிறார். மேலும் அவருடன் அணி தோல்வி அடைந்தது குறித்து காரசாரமான விவாதத்திலும் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஒரு அணி என்னதான் தோல்வி அடைந்தாலும் அணியின் கேப்டனை இப்படியா மைதானத்தில் வைத்து திட்டுவது? என்று கே.எல் ராகுல் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக போர் கொடி தூக்கியுள்ளனர்.

- Advertisement -

மேலும் கே.எல் ராகுலை திட்டிய லக்னோ அணி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான படுதோல்வி கே எல் ராகுல் மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அணியின் உரிமையாளர் கே எல் ராகுலை திட்டிய சம்பவமும் அவருக்கு தலை குனிவை ஏற்படுத்தியும் இருக்கிறது.

இதனால் இந்த மன உளைச்சலின் காரணமாக கேஎல் ராகுல் தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி வருகிற மும்பை மற்றும் டில்லி போட்டிகளில் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதனால் தான் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவெடுத்த காரணத்தினால் கேப்டன் பதவியை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

கே எல் ராகுலின் இந்த முடிவுக்கு அணி நிர்வாகம் தரப்பில் எந்த எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு லக்னோ அணியை விட்டு விலக கே எல் ராகுல் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்பு பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த கே எல் ராகுலை கடந்த 2022 ஆம் ஆண்டு 17 கோடிக்கு லக்னோ அணி இவரை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:லீக் சுற்றிலேயே வெளியேறிய மும்பை அணி.. ஹர்திக் பாண்டியா மீது சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா புகாரா?. வெளியான திடுக்கிடும் தகவல்

இந்த நிலையில் கடந்த சீசனில் காயம் காரணமாக கேஎல் ராகுல் பாதியில் இருந்து வெளியேற க்ருனால் பாண்டியா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலும் லக்னோ அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. இந்த நிலையில் அவர் கேப்டன் பதவியை விட்டு விலகுவது உறுதியானால் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரான் அதற்கு அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles