சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் அவ்வப்போது பயன்படுத்தும் வார்த்தையான பிராசஸ் எனும் வார்த்தையை வைத்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் பேசியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொல்கத்தா அணியின் தற்போதைய ஆலோசராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் இந்திய அணியில் விளையாடிய காலத்தில் இருந்து தோனி, கம்பீர் குறித்த மோதல்கள் அவ்வப்போது நிகழும். மகேந்திர சிங் தோனி கம்பீர் குறித்து பெரிதும் பேசுவதில்லை. ஆனால் கௌதம் கம்பீர் மகேந்திர சிங் தோனியைத் தான் விளையாடும் காலகட்டத்தில் இருந்தே அவ்வப்போது வம்புக்கு இருக்கும் சம்பவம் அனைவரும் அறிந்தது.
எப்போதெல்லாம் தோனி ரசிகர்கள் தோனியை பற்றி புகழ்ந்து பேசுகிறார்களோ அப்போது கௌதம் கம்பீர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தோனி குறித்து ஏதேனும் குறை கூறுவார். இதனை அறிந்த தோனி ரசிகர்கள் கௌதம் கம்பீர்க்கு தக்க பதிலடி கொடுத்தும் வருவார்கள்.
ஆனால் கடந்த சில சீசன்களாக கௌதம் கம்பீர் தோனி குறித்து குறை கூறுவதை சற்று நிறுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக கொல்கத்தா, சென்னை போட்டியின் போது கௌதம் கம்பீர் தோனியை சந்தித்து நட்பு பாராட்டியது நாம் அனைவரும் பார்த்திருப்போம். இந்த நிலையில் தற்போது மீண்டும் தோனியை வம்புக்கு இழுத்து கௌதம் கம்பீர் பேசி உள்ளது சிஎஸ்கே ரசிகர்களை சற்று எரிச்சல் அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து கௌதம் கம்பீர் கூறும் பொழுது
“என்னை கேட்டால் ஒவ்வொரு போட்டியின் முடிவும் மிக முக்கியம் என்று தான் சொல்வேன். ஆனால் சிலர் process என்று கூறி பயிற்சி பெறுதல், கள செயல்பாடு இவற்றை சரியாக செய்தால் முடிவு நமக்கு சாதகமாக வரும் என்று கூறுவார்கள். ஆனால் அதில் எனக்கு பெரிதும் நம்பிக்கை இல்லை. போட்டியை காண வரும் ஒவ்வொரு ரசிகரும் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் வருகிறார்கள்.
எனவே எனக்கு ஆட்டத்தின் முடிவு என்பது மிகவும் முக்கியம். விசுவாசமான ரசிகர்கள் என்றால் நான் கொல்கத்தா அணி ரசிகர்களை கூறுவேன். ஐபிஎல் இன் தொடக்கத்தில் நான்கு சீசன்களில் கொல்கத்தா அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஆனால் ரசிகர்கள் அப்போது கொல்கத்தா அணிக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள்.
இதையும் படிங்க:உங்கள் மனைவிதான் உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்.. தினேஷ் கார்த்திக்கின் கேள்விக்கு விராட் கோலியின் சுவாரசியமான பதில்
2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுதான் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அப்போது முதல் இப்போது வரையும் கொல்கத்தா அணி என்று ரசிகர்கள் அணி வீரர்களுக்கு எப்போதும் முழு ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் 16 வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் பெங்களூர் அணிக்கு அந்த அணியின் ரசிகர்கள் இன்னமும் தங்களது ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனது உண்மையான விசுவாசிகள் பெங்களூர் ரசிகர்கள்தான் என்று கூறி இருக்கிறார்.

