உங்கள் மனைவிதான் உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்.. தினேஷ் கார்த்திக்கின் கேள்விக்கு விராட் கோலியின் சுவாரசியமான பதில்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக பெங்களூர் அணி வீரர்கள் இடையே என கலகலப்பான உரையாடலில் தினேஷ் கார்த்திக் கேட்ட கேள்விக்கு விராட் கோலி சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் சுமாராக விளையாடிக் கொண்டிருக்கும் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இனி பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறுவது அவசியம்.

- Advertisement -

இந்த நிலையில் பெங்களூர் அணி நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கொல்கத்தா மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே பிரச்சனைக்குரிய பெங்களூர் அணி, இரண்டிலுமே வலுவான கொல்கத்தா அணியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை காண ரசிகர்களிடையே ஆவலாக உள்ளது.

- Advertisement -

போட்டிக்கு முன்பாக அணி வீரர்களை ஆசுவாசப்படுத்த பூமா நிறுவனத்தின் அடையாளமாக இருக்கும் விராட் கோலி, பூமா இந்தியாவுக்கான ‘உங்கள் அணி வீரரை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற பிரிவில் அணி வீரர்கள் மற்ற வீரர்களை எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் பட்டிதார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் மற்ற வீரர்களிடம் கேள்விகளை கேட்க, மற்ற மூன்று வீரர்கள் சுவாரசியமான பதில்களை அளித்தனர்.

இந்த போட்டியின் ஒரு முக்கிய நிகழ்வாக தினேஷ் கார்த்திக் விராட் கோலியிடம் கிரிக்கெட்டிற்கு வெளியே தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் யார்? என்று கேட்டார். அதற்கு சற்றும் தயங்காத விராட் கோலி உங்கள் மனைவி என்று பதில் அளிக்க, உடனே தினேஷ் கார்த்திக் “இது ஒரு சிறந்த பதில், நீங்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக சொல்வீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது தினேஷ் கார்த்திக்கின் மனைவியான தீபிகா பல்லிக்கல் தேசிய அளவிலான ஒரு ஸ்குவாஷ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே விராட் கோலி தினேஷ் கார்த்திக்கிற்கு அவரது மனைவி விளையாடும் விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: 42 வயசுல தோனியால மட்டும் இது எப்படி முடியுது.. ரொம்ப பசியோட இருக்காரு.. தோனி குறித்து வியப்படையும் டாம் மூடி

விராட் கோலி கிரிக்கெட் களத்தில் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவரோ, அதேபோல அவரது குண நலன், அடுத்தவர்களை மரியாதையாக நடத்தும் விதம், சிறந்த நகைச்சுவை உணர்வு போன்றவற்றிலும் ரசிகர்களின் இதயங்களை வெல்லத் தவறியதில்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles