25 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 4வது முறை.. தோனி ரோஹித் உடன் இணைந்த விராட் கோலி.. Ind vs nz சீரிஸ்

கடந்த 25 ஆண்டுகால இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு தொடரில் 50 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக ஒருவர் மட்டுமே இருந்தது வெறும் நான்கு முறைதான் நடந்துள்ளது. இதில் 2012-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் எம்.எஸ். தோனி 113*, 54* ரன்களும், 2013-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 65 ரன்களும் அடித்திருந்தார்.

- Advertisement -

அதேபோல், 2024-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மட்டுமே 50 ரன்களைக் கடந்து 64, 58 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இதே நிலை மீண்டும் நிகழ்ந்துள்ளது. முதல் போட்டியில் விராட் கோலி அதிரடியாக 74 ரன்கள் எடுத்ததே இந்தத் தொடரில் இந்திய வீரர் ஒருவரின் ஒரே அரைசதமாக அமைந்துள்ளது.

- Advertisement -

இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் நான்காவது முறையாக, ஒரு இந்திய பேட்ஸ்மேன் மட்டுமே 50 ரன்களைக் கடந்த தொடராக நியூசிலாந்துக்கு எதிரான தொடர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. தோனி, ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து தற்போது விராட் கோலியும் இந்த அரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles