நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சக வீரர் ஒருவரின் ஆட்டத்தையும் மனஉறுதியையும் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். குறிப்பாக விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அல்லாமல், அணியின் வெற்றிக்காக அச்சமின்றிப் போராடும் ஒரு வீரரைப் போர் குதிரையுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறும்போது, “போருக்குச் செல்லும் குதிரையைப் போல எந்தவித பயமும் இல்லாமல் களத்தில் போராடக்கூடியவர் சிராஜ். எத்தகைய சூழலிலும் போராடத் தயாராக இருப்பவர். அணியில் மிகவும் உறுதியான, எதற்கும் அஞ்சாத வீரராக இருக்கும் அவர், மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் ஊக்கமளிக்கிறார். தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் போட்டிகளால் வீரர்களுக்குச் சோர்வு ஏற்படுவதையும் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்தான்” என்று பாராட்டியுள்ளார்.

