இலங்கை அணியைச் சேர்ந்த வேகப்பந்து பேச்சாளரான மதீசா பத்திரானா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் தனது தந்தைக்கு நிகரானவர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் இலங்கை அணியை சேர்ந்த வேகப்பந்து பேச்சாளர் மதிஷா பத்திரனா. இவரின் பந்துவீச்சு ஆக்சன் பார்ப்பதற்கு மலிங்காவை போலவே இருப்பதால் இவரது பந்துவீச்சில் பெரிதும் கவரப்பட்டு சென்னை அணி இவரை ஏலத்தில் வாங்கியது.
அந்த சீசனில் இருந்து சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் முக்கியமான நேரத்தில் ரன்கள் விட்டுக் கொடுக்காமல் விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். இவரை எந்த நேரத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும் எந்த லைன் அண்ட் லென்தில் இவரை வீச சொல்ல வேண்டும் என்று மகேந்திர சிங் தோனிக்கு மட்டுமே இவரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கிறது.
சென்னை அணியில் நட்சத்திர அந்தஸ்தை வாங்கிவிட்டு இலங்கை அணிக்காக விளையாடியவர் அங்கு விக்கெடுகளை வீழ்த்த தவறியதுடன் ரன்களையும் வாரி வழங்கி இருக்கிறார். இருப்பினும் கடந்த சீசனில் சென்னை அணிக்காக மீண்டும் திரும்பிய பத்திரனா சென்னை அணிக்காக விளையாடும் போது மட்டும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
எனவே சென்னை அணியின் மீதும் மகேந்திர சிங் தோனி மீதும் மிகுந்த மரியாதையை வைத்திருக்கும் அவர் தோனியை தன் தந்தைக்கு நிகராக பார்ப்பதாக கூறியிருக்கிறார். மேலும் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறாமல் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் விளையாட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் இது குறித்து அவர் விரிவாக கூறும்போது
“என் கிரிக்கெட் வாழ்க்கையில் என் தந்தைக்கு நிகராக மகேந்திர சிங் தோனி என்னை கவனித்து வருகிறார்.
நான் விளையாடும் போது என்னை கவனித்துக் கொள்வது மட்டுமில்லாமல் இக்கட்டான சூழ்நிலைகளில் தகுந்த அறிவுரைகளையும் வழங்குகிறார். களத்தில் மகேந்திர சிங் டோனி செய்கின்ற செயல்கள் அனைத்தும் நான் எனது வீட்டில் இருக்கும் போது என் தந்தை செய்கின்ற செயல்கள் போன்று இருக்கும். நான் விளையாடும் போதும், களத்திற்கு வெளியே இருக்கும் போதும் மகேந்திர சிங் தோனி என்னிடம் நிறைய பேச மாட்டார்.
குறைவாகவே என்னிடம் பேசுவார். ஆனால் குறைவாக பேசும் விஷயங்களிலும் நிறைய வித்தியாசம் எதிர்பார்க்கலாம். நான் இந்த சீசன் முடிந்து அடுத்த சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடினால் மஹி பாய் எனக்காக இன்னும் ஒரு சீசன் கண்டிப்பாக விளையாட வேண்டும் அதுவே என் ஆசையும் கூட ” என்று கூறியிருக்கிறார்.
In my cricket life, mostly he's playing my father's role – Pathirana about MS Dhoni. 💛 pic.twitter.com/tnQVb58Ka2
— Dhoni Army TN™ (@DhoniArmyTN) May 3, 2024

