17வது ஐபிஎல் தொடரின் 49 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் மகேந்திரசிங் தோனி செய்த சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் குவித்தது. சிஎஸ்கேவின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். சென்னை மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினர்.
இருப்பினும் பவர் பிளேவரை நன்றாக சென்று கொண்டிருந்த ஆட்டம், பவர் பிளேவிற்கு பிறகு பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் சென்னை அணியின் ரன் வேகம் முற்றிலுமாக குறைந்தது. பின்னர் இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி இரண்டாவது பாதியில் ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக அமைந்ததால் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன்களை குவித்தனர். இதனால் 17 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் கடைசி ஓவரை பஞ்சாப் அணி வீரர் அர்ஸ்தீப் சிங் வீசினார். அப்போது மகேந்திர சிங் தோனி ஸ்டிரைக்கில் இருக்க பெரிய ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் பந்தில் பௌண்டரி விளாசிய தோனி இரண்டாவது பந்து டாட் பாலாக அமைய, மூன்றாவது பந்து பீல்டரை நோக்கி அடிக்கப்பட்ட போது எதிர் முனையில் இருந்த டாரி மிச்சல் ரன்கள் எடுக்க ஓடி வர அவரைப் பார்த்த மகேந்திர சிங் டோனி ரன்கள் எடுக்க வேண்டாம் என்று தடுத்து விட்டார்.
இருப்பினும் மிச்சல் தோனி நின்று கொண்டிருந்த கிரீஸ் லைனை தொட்டுவிட்டு திரும்பவும் எதிர்முனைக்கு சென்றார். இது இரண்டு ரன்கள் ஓடியதற்கு சமமாக பார்க்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே தனது சமூக வலைதளத்தில் “மின்னல் மிச்சல் என்று குறிப்பிட்டு மிச்சல் ஓடியது இரண்டு ரன்கள் ஆக கணக்கிடப்படுமா? “என்று பதிவிட்டது. இதனைக் கண்ட ரசிகர்கள் தோனி ஓடி இருக்க வேண்டும் என்றும், தோனி பேட்டிங் செய்ய விரும்பினால் முன்னரே களமிறங்கி ஆட வேண்டியது தானே என்றும் தங்கள் வருத்தத்தினை தெரிவித்து வருகின்றனர். டோனி செய்த செயல் தற்போது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.
#MinnalMitchell – So does that count as a two? ⚡️😉
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2024

