பேட்டிங் செய்வதை விட இந்த விஷயம் எனக்கு அழுத்தமாக உள்ளது.. இதற்காக பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.. தோல்விக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ்

17வது ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. பொதுவாக சென்னை ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் தொடக்கத்திலிருந்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க தவறினர். இருப்பினும் அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பவர் பிளேவரை நன்றாக சென்ற இந்த ஆட்டத்தை பின்னர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆடுகளம் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவின் காரணமாக நன்றாக பேட்டுக்கு வந்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ 46 ரன்களும், ரூசோ 43 ரன்களும் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். மேலும் சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஆன தீபக் சகர் முதல் ஓவரிலேயே வெளியே சென்றது சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

எனவே இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறும் பொழுது
“இந்த போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்றுதான் நினைக்கிறேன். ஆடுகளம் முதலில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதற்கு பின்னர் தான் பேட்டிங்க்கு சாதகமாக மாறியது. இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதியிலும் எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டிக்கு முன்னர் நான் டாஸ் குறித்து பயிற்சி செய்தேன்.

- Advertisement -

ஆனால் அது டாஸ் போடும்போது வேலை செய்யவில்லை. உண்மையில் டாஸ் போடும்போது அழுத்தமாக உணர்கிறேன். இந்த போட்டியை பொறுத்தவரை 180 ரன்கள் எடுத்திருந்தாலும் அது குறைவான இலக்குதான். தீபக் சகர் காயம் காரணமாக முதலிலேயே வெளியேறியது எங்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எங்களிடம் இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர்.

இதையும் படிங்க:தோனிக்கு எதிராக நாங்கள் அமைத்த திட்டம்.. எங்களுக்கு நன்றாக வேலை செய்தது.. வெற்றிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் ஷாம் கரண்

ஏனென்றால் பனிப்பொழிவின் காரணமாக ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. இன்னும் நான்கு ஆட்டங்கள் இருக்கிறது நான்கிலும் வெற்றி பெற்று வலுவான முறையில் பிளே ஆப் சுற்றித் தகுதி பெற விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles