நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. வெற்றி பெற்ற பின் பஞ்சாப் அணியின் கேப்டன் தோனிக்கு எதிராக வகுத்த திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் முதலில் பேட்டிங்க்கு மெதுவாக காணப்பட்டது. இருப்பினும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி பவர் பிளேவரை 55 ரன்கள் சேர்த்தனர்.
அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சால் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான நேரத்தில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. இதில் அதிகபட்சமாக சென்னையின் கேப்டன் ருத்ராஜ் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 62 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரர் ரகானே 29 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதிகபட்சமாக பேர்ஸ்டோ 43 ரன்களும், ரூசோ 46 ரன்களும் குவித்தனர். 17 ஓவர்களில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட் 163 ரன்கள் குவித்து சென்னை அணியை தோற்கடித்தது. இதற்கு முன்னர் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 19வது ஓவரில் தோனி களம் இறங்கிய போது அவருக்கு எதிராக பந்து வீச ஸ்பின்னரைக் கொண்டு வந்ததும், தோனிக்கு எதிராக அமைத்த ஃபீல்டிங் செட் அப்பும் ஷாம் கரனுக்கு பாராட்டை பெற்று தந்தது.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பின்னர் இது குறித்து அவர் கூறும் பொழுது
“எப்போது சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்று என்று புள்ளிகள் பெற்றாலும் அது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்து வெளி மைதானங்களில் சிறப்பாக வெற்றி பெற்றோம். அதேபோல இந்த ஆண்டும் அவ்வாறே நடைபெற்று வருகிறது.
இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடக்கூடிய எல்லா அணிகளுமே ஆபத்தானது. இன்னும் சில நாட்களில் திரும்பவும் சிஎஸ்கே அணியுடன் மோத போகிறோம். இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ரபாடாவுக்கு புதிய பந்தை கொடுத்தேன் அவர் சிறப்பாக பந்து வீசினார். 19 ஆவது ஓவரை ராகுல் சகாரை வைத்து வீசவைத்தோம். அவர் தற்போது அணிக்கு சிறந்த முறையில் திரும்பி வந்திருக்கிறார். இன்றைய போட்டியில் தோனிக்கு எதிராக ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால் பீல்டிங் செட்டப்பும் மாற்றி அமைத்தோம் அது இன்று நன்றாக எங்களுக்கு வேலை செய்து இருக்கிறது.
இன்றைய போட்டியில் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். ஆனால் இன்றைய போட்டியில் எனது பந்துவீச்சில் ரன்கள் அதிகமாக சென்றது. மற்றபடி அனைத்து பந்துவீச்சாளர்களும் அற்புதமாக பந்து வீசினர். அடுத்து சிஎஸ்கே உடன் தரம்சாலா மைதானத்தில் மோத இருக்கிறோம். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரே போட்டியை மட்டுமே வெல்வது குறித்து யோசிக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

