இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அவரது மெழுகு சிலையை திறந்து வைத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழும் விராட் கோலி கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக ரண்களை குவித்துக் கொண்டிருக்கும் ஒரே வீரர் என்றால் விராட் கோலிதான். களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு 50 ரன்களையாவது குவிக்காமல் வெளியே வர மாட்டார்.
அந்த அளவிற்கு தொடர்ச்சியாக தன்னை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். விராட் கோலியை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்று திறந்து வைத்துள்ளனர். 35 கிலோ எடையுள்ள இந்த மெழுகு சிலையை நேற்று உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18ம் தேதி அன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த மெழுகு சிலையை செய்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன. இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் குறிப்பாக 44 சிலைகள் உள்ளன. அதில் கிரிக்கெட் வீரர்களின் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனியின் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கு அடுத்ததாக தற்போது விராட் கோலியின் மெழுகு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் இந்த மெழுகு அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியமான விஐபி களின் மெழுகு சிலைகளும் உள்ளன. இதில் மகாத்மா காந்தி, ஏபிஜே அப்துல் கலாம், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், கல்பனா சாவ்லா, அன்னை தெரசா மற்றும் அமிதாப்பச்சன் ஆகிய முக்கிய பிரமுகர்களின் சிலைகளும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.
அங்கே செல்லும் சுற்றுலாப் பயணிகள் விராட் கோலியின் மெழுகு சிலையும் வையுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது அவரது சிலையையும் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அருங்காட்சியத்தின் முக்கிய நிர்வாகி கூறியிருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
விராட் கோலி தற்போது ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க:பும்ரா பந்தில் சிக்சர் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.. ஆனாலும் வருத்தமாக உள்ளது.. போட்டிக்கு பின்னர் அசுட்டோஸ் சர்மா பேட்டி
இதற்கு அடுத்து வரவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் பங்கு முக்கியத்துவம் பெறும் வகையில் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற டி20 உலக கோப்பை காண இந்திய வீரர்களின் பட்டியலை வருகிற மே மாதம் முதல் வாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ளது. ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் வீரர்களை பொருத்து உலகக் கோபிக்கான இறுதித் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Virat Kohli wax statue in Jaipur. 🐐 pic.twitter.com/5NTDD7yCvz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 19, 2024

