நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே தோல்வியடைந்த விதம் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி மற்றும் ஏழு போட்டிகளில் தோல்வி என புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. மேலும் முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும் அணியாக சிஎஸ்கே இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரை பார்க்கும்போது சிஎஸ்கே சேர்த்து வைத்த மரியாதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
சென்னை அணியின் தோல்வி மெகா ஆக்ஸனிலேயே ஆரம்பித்துவிட்டது. மாறிவரும் டி20 கிரிக்கெட் க்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்யாமல், அங்கேயே முதல் தவறை செய்தது. மேலும் டீம் காம்பினேஷனும் சரியாக அமையாமல் போக இதுவரை அணியில் இருந்த 25 வீரர்களில் 22 பேர் மொத்தமாக பயன்படுத்தப்பட்டு விட்டார்கள். ஒன்பது போட்டியில் ஆகியும் சிஎஸ்கே ஒரு சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங் செய்வதற்கு யார் இருக்கிறார்கள் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சென்னை அணி மெகா ஏலத்தின் போது ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷான் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. எனவே ஏலத்திலேயே சிஎஸ்கே பெரிய தவறை செய்து விட்டதாக நினைக்கிறேன். ஏனென்றால் தோனிக்குப் பிறகு சென்னை அணியின் விக்கெட் கீப்பராக யார் இருப்பார் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. இந்த ஐபிஎல் சீசனில் சென்னை பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் டாட் பந்துகளை விளையாடுகிறார்கள். இதற்கு முன்பு எந்த ஒரு சீசனிலும் இது போன்ற விளையாடும் சென்னை அணியை நான் பார்த்ததில்லை.
இதையும் படிங்க:சொந்த மண்ணில் ஆர்சிபி அணிக்கு முதல் வெற்றி.. 7 பந்தில் 4 விக்கெட்டுகள்.. ஆட்டத்தை திரும்பிய ஹேசல்வுட்
டாப் ஆர்டர் வீரர்களிடமிருந்து சரியான உதவி கிடைக்காததால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களும் தடுமாறி வருகிறார்கள். நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் வெளியேறி விட்டதால் ஜடேஜா,சிவம் துபே போன்ற வீரர்கள் கூட மிடில் வரிசையில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை அணியை மிகப் பெரிய பிரச்சனைகளை இந்த சீசனில் சந்தித்துள்ளது என்று பேசி இருக்கிறார்

