ஓய்வு குறித்து எழுப்பிய கேள்வி.. விளக்கம் கொடுத்த ரோஹித் சர்மா.. நவம்பர் 19-ஐ உபயோகித்து பதிலளிக்க காரணம் என்ன.?

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் முதலாவதாக இறுதிப் போட்டி நாளை மும்பையில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரும் முழுவதும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

- Advertisement -

9 போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி 594 ரன்கள் எடுத்து 2023 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். மேலும் இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதன் காரணமாக பின் வரிசையில் வரும் வீரர்கள் எந்த வித அழுத்தமும் இன்றி விளையாடுவதற்கு இது
பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு முன்பாகவே ரோகித் சர்மா இந்த வருட உலகக்கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் என கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு பேச்சு நிலவி வந்தது. தற்போது இந்தியா அரை இறுதி போட்டியை நெருங்கி இருக்கும் வேலையில் இது தொடர்பாக ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அரை இறுதிப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவாக பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” என்னுடைய கிரிக்கெட் பயணத்தை பற்றி யோசிப்பதற்கு நேரமில்லை. நவம்பர் 19ஆம் தேதிக்கு பிறகு யோசிப்பதற்கு நிறைய நேரம் இருக்கும். இந்த ஒரு வாரம் எங்களுக்கு மிக முக்கியமானது. நாங்கள் நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். அதிலிருந்து மனநிலையை எங்கும் மாற்ற விரும்பவில்லை” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசி அவர் ” நியூசிலாந்து ஒரு கட்டுப்பாடு ஆன அணி. அவர்கள் எதிர் அணியின் பலம் மற்றும் பலவீனங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் நமது அணியின் பல வீரர்களுக்கு எதிராகவும் பல வீரர்களுடனும் விளையாடி இருக்கின்றனர். மேலும் தொடர்ச்சியாக பலரை இறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளை ஐசிசி தொடர்களில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவம் அவர்களுக்கு கை கொடுக்கும். உலக கோப்பையின் முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை எல்லா ஆட்டங்களிலும் அழுத்தம் இருக்கிறது. இந்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். வீரர்களும் அழுத்தத்தை நல்ல விதத்தில் கையாண்டு இருக்கின்றனர். இதனையே நாங்கள் தொடர விரும்புகிறோம். இந்திய வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அழுத்தம் இருக்கிறது. விழியில் இருந்து வரும் அழுத்தங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக ஆடி அரை இறுதியை ஏற்றி இருக்கிறோம். முதலில் அரை இறுதி எட்ட வேண்டும் என்பது எங்கள் இலக்காக இருந்தது. அதற்காக ஒன்பது லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒன்பது நீட் போட்டிகள் என்பது இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் தொடர்களுக்கு சமம் . முதல் ஐந்து போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்து சிறப்பாக வென்றோம். கடைசி நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் அனைத்து அடிப்படைகளையும் கவர் செய்து விட்டோம் என்றே கருதுகிறேன். நாங்கள் வித்தியாசமாக செய்ய வேண்டிய தேவை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் நவம்பர் 19க்கு பிறகு தான் அது குறித்து யோசிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். இதனால் ஒருவேளை ரோகித் சர்மா உலக கோப்பையை இந்தியா வென்றால் ஓய்வு பெறுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. எனினும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடுவாரா என்ற கேள்வியும் மத்தியில் எழுந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles