விராட் ஓய்வுக்குப் பிறகு வாயை மூடுனு யார் சொல்லுவா.? கோலியைப் போல இன்னொரு ஆள் வேணும்.. மைக்கேல் வாகன் கூறும் கருத்து

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பிளே ஆப் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இந்தத் தொடரில் விராட் கோலி 741 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு தற்போது 35 வயதாகி வருவதால் டி20 உலக கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற்று விடுவார் என்ற தகவல் பரவி வருகிறது. தனி நபர் சாதனையாக கிரிக்கெட்டில் விராட் கோலி படைத்த சாதனைகள் ஏராளமானது.

- Advertisement -

இதற்கு மேல் அவர் படைக்க சாதனைகளே இல்லை என்பது போல அந்த அளவுக்கு தனது பேட்டிங் மூலம் மக்களை மகிழ்வுக்கு உள்ளாக்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி எளிமையான வாழ்க்கை வாழ நினைத்தால் கிரிக்கெட்டில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற்று விடுவார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து மைக்கேல் வாகன் விரிவாக கூறும் பொழுது
“இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி சற்று ஓய்வெடுத்துக் கொண்டு இங்கிலாந்தில் வசித்து வந்த போது சாதாரண வாழ்க்கையை வாழ்ந்ததாக விராட் கோலி கூறியதை படித்தேன். மேலும் விராட் கோலி சாதாரண வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

இதன் மூலமாக விராட் கோலிக்கு சீக்கிரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்ற நினைப்பு தோன்றியிருக்கும். இதனால் எப்போது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறாரோ அப்போது கிரிக்கெட்டில் இருந்து நிச்சயம் ஓய்வு பெற்று விடுவார். இந்த ஐபிஎல் தொடர் விராட் கோலிக்கு நன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் விராட் கோலி பெரிதும் அறியப்பட்ட வீரராக இருக்கிறார். டி20 கிரிக்கெட் காலத்திற்கு ஏற்ப தற்போது மாறி வரும் சூழலில் விராட் கோலி தனது பேட்டிங்கை மெருகேற்றி இருக்கிறார். விராட் கோலி எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பில் 100% அணிக்கு பங்களிப்பை வழங்குவார். இந்த ஐபிஎல் தொடர்க விராட் கோலியின் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க:சேப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரால் எழுந்த சர்ச்சை.. அப்போ எல்லாமே ஸ்கிரிப்ட்டா.? ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் இருந்த கேள்வி

விராட் கோலி எப்போதுமே பார்வையாளர்களை ஆட்டத்தின் மேல் ஒரு படி மேலாக ஆர்வமுடன் வைத்திருப்பார். கேமராவின் முன்னிலையில் பார்வையாளர்களை பார்த்து வாயை மூடு என்பது போன்ற செய்கைகளும் விளையாட்டுத் துறைக்கு நிச்சயமாக தேவைப்படுகிறது. அப்போதுதான் கிரிக்கெட் பற்றி ஏதேனும் ஒரு சலசலப்பான சம்பவங்கள் நினைவு கூறப்பட்டு கொண்டே இருக்கும். இவரைப் போன்ற நபர்களைத்தான் ரசிகர்கள் மேலும் உற்று நோக்குவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles