இப்படிப்பட்ட பிளேயர்லா டீமுக்கு தேவையே இல்லை.. அவர் ஒருவருக்காக ஒட்டுமொத்த அணியையும் மாற்ற முடியாது- தோனி பரபரப்பு பேட்டி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு முக்கிய வீரர் வாங்கப்பட்டதாகவும், அவர் அணியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட சாதனைகளுக்காகவே விளையாடியதாகவும், சென்னை அணி இரண்டு அடிகள் இறங்கி வந்த போதிலும், அவர் அதை புரிந்து கொள்ளாததால் வேறு வழி இன்றி அவரை நீக்க முடிவு செய்ததாகவும் மகேந்திர சிங் தோனி கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டிக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய தோனி, தனது வாழ்வியல் முறை குறித்தும், சென்னை அணி குறித்தும் ரசிகர்கள் குறித்தும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

- Advertisement -

சென்னை அணிதான் தனக்கு எல்லாமே, இரண்டு மாதங்கள் விளையாடிவிட்டு ஒரு சாதாரண வீரர் போல அதை கடந்து செல்ல முடியாது என்று கூறும் மகேந்திர சிங் தோனி தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் வீட்டில் உள்ள பைக்குகளை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பயணம் செய்தால் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவேன் எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பிறகு சென்னை அணி குறித்துக் கூறிய தோனி ஒரு முக்கிய வீரரை வாங்கி அவர் சரியாக ஒத்துழைக்காததால் வேறு வழி இன்றி அவரை நீக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பெயரை தோனி குறிப்பிடவில்லை. முக்கியமான வீரர் மட்டுமே என்று கூறி இருக்கிறார். இதை சிஎஸ்கே ரசிகர்களின் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் பலரும் அந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் என்று கூறி வருகின்றனர்.

இந்த செய்தி குறித்து மகேந்திர சிங் தோனி விரிவாக கூறும் பொழுது
“எங்கள் அணியில் ஒரு நல்ல வீரரை தேர்வு செய்தோம். ஆனால் அவர் அணியின் சூழ்நிலைக்கு ஒத்துப் போகவில்லை. நாங்கள் அவரிடம் எதிர்பார்த்தது அணிக்கு தேவையாக ஒரு அடி மட்டும் எடுத்து வையுங்கள் என்று கூறினோம். அவர் அதை செய்யும் பட்சத்தில் அவருக்காக மூன்று அடிகள் இறங்கிச் செல்ல தயாராக இருந்தோம்.

- Advertisement -

ஆனால் அது நடக்கவில்லை இரண்டாம் கட்டமாக அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நீங்கள் உங்கள் தனிப்பட்ட ஆட்டத்தினை விளையாடுங்கள் என்று கூறினோம். அதுதான் இரண்டாவது வாய்ப்பாக கொடுக்க முடியும். மூன்றாவது ஒரே வாய்ப்பு இது எதுவுமே ஒத்துவரவில்லை என்றால் அவரை அணியில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழி இல்லை. வியாபாரமோ விளையாட்டோ நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே இலக்கு.

இதையும் படிங்க:நீங்க என்ன திட்டி வேஸ்ட்.. எங்க கேள்வி கேட்கணுமோ அங்க கேளுங்க.. அம்பத்தி ராயுடு பேட்டி

ஒரு அணியின் இலக்கு ஒரு வீரரிடம் இருந்து அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வருவது மட்டுமே. அதை அவர் செய்தால் அவரை அணியின் சொத்தாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதனை நான் முயற்சிப்பேன். ஆனால் அவர்கள் அதனை தயாராக செய்ய வேண்டும். அதை அவர்கள் செய்யத் தவறும் பட்சத்தில் நான் மூன்றாவது வாய்ப்பைதான் எடுக்க முடியும். அவர்கள் முக்கிய வீரராக இருந்தாலும் அணியின் நலனுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நீக்கித்தான் ஆக வேண்டும். அதற்கு பதிலாக வேறு யாராவது இடத்தை நிரப்புவார்கள். அவர்கள் அணியின் நலனுக்கு பாடுபடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles