நீங்க என்ன திட்டி வேஸ்ட்.. எங்க கேள்வி கேட்கணுமோ அங்க கேளுங்க.. அம்பத்தி ராயுடு பேட்டி

ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனில் பெங்களூர் அணி பிளே ஆப் வரை தகுதி பெற்று ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து திரும்பவும் கோப்பையை வெல்லாமல் வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கம்பீரமாக ஆறு போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றவுடன் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கலாட்டா என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இது சிஎஸ்கே ரசிகர்களைத் தாண்டி சாதாரண கிரிக்கெட் ரசிகர்களையும் சற்று எரிச்சல் அடைய வைத்தது.

- Advertisement -

இத்தனை ஆர்ப்பாட்டங்களுடன் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய பெங்களூர் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டே வெளியேறியது. இதனைக் கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்கள் ஆடிய ஆட்டத்திற்கு தற்போது தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க, சிஎஸ்கே வின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு ஆர்சிபி அணியை சற்று காரசாரமான விமர்சனங்கள் செய்து வந்தார். இதனைக் கண்ட ஆர்சிபி ரசிகர்கள் அம்பத்தி ராயுடு, விராட் கோலியின் சாதனைகளையும் கம்பேர் செய்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இது தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக போய்க்கொண்டிருக்க, அம்பத்தி ராயுடு திரும்பவும் சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப் பதிவில் ஆர்சிபி ஆதரவாளர்கள் பல ஆண்டுகளாக அணிக்காக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறீர்கள். என்னால் இரக்கத்தை மட்டுமே காண்பிக்க முடியும். கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற வெறி உங்களுக்கு இருப்பது போல நிர்வாகத்திற்கும் வழிநடத்துபவர்களுக்கும் இருந்தால் கண்டிப்பாக கோப்பையை வென்றிருக்கலாம். ஆனால் ஆர்சிபி அணியில் உள்ள வீரர்களுக்கு தனிப்பட்ட சாதனைகள் மட்டுமே முக்கியமாக தெரிகிறது.

- Advertisement -

இதையெல்லாம் சரியாக செய்திருந்தால் ஆர்சிபி அணியின் நேரம் பல கோப்பைகளை வாங்கி இருக்கும். பெங்களூர் அணியில் இருந்து எத்தனை தலை சிறந்த வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். தனிப்பட்ட சாதனைகளை விட அணிதான் முக்கியம் என்று நினைக்கும் வீரர்களை திரும்பவும் கொண்டுவர ஆர்சிபி நிறுவனத்தை வலியுறுத்துங்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கேஎல் ராகுல் திட்டுதான் வாங்கினார்.. ஆனா இந்த ராஜஸ்தான் வீரர் அடியே வாங்கி இருக்காராம்.. அவரே குறிப்பிடும் தகவல்

வருகிற ஐபிஎல் மெகா ஏலத்தை பயன்படுத்தி ஆர்சிபி நிர்வாகமும் சரியான தகுந்த வீரர்களை வாங்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். அண்மையில் விராட் கோலி போன்ற வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடி வருகின்றனர் என்ற கருத்து மேலோங்கி வரும் நிலையில், ராயுடுவும் தற்போது இதே போன்ற கருத்தினை தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles