லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணி கடந்த வாரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் கேப்டன் கே எல் ராகுலிடம் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த காட்சி இணையதளத்தில் வைரலானது.
லக்னோ அணி நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் அணி பத்து ஓவர்களில் அடைந்து அபார வெற்றி பெற்றது. இந்த படு தோல்விக்குப் பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார்.அந்தக் காட்சி இணையதளத்தில் வைரலான நிலையில், கே எல் ராகுலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வந்தனர்.
இதனால் கே எல் ராகுல் எஞ்சிய போட்டிகளில் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாகவும்,அடுத்து நடைபெற இருக்கிற ஏலத்தில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாட போவதில்லை என்ற தகவலும் பரவியது. இந்த சூழ்நிலையில் லக்னோ அணி நிர்வாகமும் கே.எல் ராகுலை தக்க வைக்கப் போவதில்லை என்று அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்த விஷயம் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேஎல் ராகுலை இரவு விருந்துக்கு அழைத்து சமாதானம் பேசி இதனை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணிக்காக முன்பு விளையாடிக் கொண்டிருந்த ராஸ் டெய்லர் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இதே போன்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் இது குறித்து தனது சுயசரிதை புத்தகத்திலும் எழுதி இருக்கிறார். இது குறித்து ராஸ் டைலர் விரிவாக கூறும் பொழுது
“நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது தொடர்ந்து சில முறை டக் அவுட் ஆகி வெளியிடினேன்.
அப்போது அங்கு வந்த அணி உரிமையாளர் ஒருவர் நீங்கள் டக் அவுட் ஆவதற்காக உங்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று எனது கன்னத்தில் நான்கு ஐந்து முறை அடைந்தார். அப்போது அவர் சிரித்துக் கொண்டிருந்ததால் உண்மையில் அறைகிறாரா? அல்லது விளையாட்டாக அறைகிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் அணி வீரர்கள் இருக்கும் அந்த இடத்தில் அவ்வாறு நடந்து கொள்வது சரியில்லை என்று நினைக்கிறேன்” எனக்கூறி இருந்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் கப் வேணுமா.? தயவு செஞ்சு ஆர்சிபிய விட்டு போயிருங்க கோலி.. கெவின் பீட்டர்சன் பேட்டி
இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானைக் கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் வெற்றி அடைந்தாலும், தோல்வியடைந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையை ஷாருக்கான் மேற்கொள்வார். தோல்வி அடைந்தால் வீரர்களிடையே உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளை கூறும் அவர், வெற்றி பெறும் அணிக்கு பாராட்டை கூறுவதிலும் அவர் தவறுவதில்லை.

