ஐபிஎல் கப் வேணுமா.? தயவு செஞ்சு ஆர்சிபிய விட்டு போயிருங்க கோலி.. கெவின் பீட்டர்சன் பேட்டி

புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறியது. தொடர்ச்சியாக 16 வருடங்களாக தோல்வியடைந்து வரும் பெங்களூர் அணி இந்த முறையும் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல விராட் கோலி தகுதியான நபர் என்றும், ஆனால் கோப்பை வெல்ல வேண்டுமானால் விராட் கோலி ஆர்சிபி அணியில் இருக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.
விராட் கோலி தனது தொடக்க காலத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் பெங்களூர் அணிக்கு தலைமை தாங்கினாலும், இன்னும் ஒரு கோப்பையை கூட அந்த அணியால் வெல்ல முடியவில்லை என்பது சோகமான ஒன்று. அதற்குப் பிறகு விராட் கோலி தலைமை ஏற்று சில வருடங்கள் பெங்களூர் அணி வழி நடத்தினார். ஆனால் கோப்பையை வென்று தர முடியவில்லை.

- Advertisement -

அதற்குப் பிறகு டு பிளஸ்சிஸ் தலைமையில் சில வருடங்களாக பெங்களூர் அணி பிளே ஆப் சுற்று வரை முன்னேறி வருகிறது. ஆனால் விராட் கோலியின் பேட்டிங் பங்களிப்பு மட்டும் எந்தக் குறையும் இல்லாமல் தொடர்ச்சியாக அதே சமநிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனிலும் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்கள் உட்பட 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட சாம்பியன் வீரர் ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதியான நபர் என்றும், அவர் கோப்பையை வெல்ல விரும்பினால் பெங்களூர் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார். இது குறித்து பீட்டர் விரிவாக கூறும்பொழுது
“விராட் கோலி ஒரு சாம்பியன் வீரர். ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதியான நபர். இப்படிப்பட்ட ஒரு சாம்பியன் வீரர் இருந்தும் பெங்களூர் அணியால் இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமானால் பெங்களூர் அணியில் இருந்து வெளியேறி, டெல்லிய அணி அவருக்கு சரியான மாற்று அணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் டெல்லியில் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. தனது இளம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும், மாற்று அணியில் இடம் பெறவும் டெல்லி அணி சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது கால்பந்தில் நடைமுறையான ஒன்றுதான். கால்பந்து ஜாம்பவான்கள் ஆன மெஸ்ஸி, ரொனால்டோ, டேவிட் பெக்காகாம் ஆகியோர் கூட தங்களது கிளப் அணிகளில் இருந்து வேறு அணிகளுக்குச் சென்று விளையாடி இருக்கின்றனர். எனவே கோலியும் இதே நடைமுறையை பின்பற்றலாம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles