ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று தனது ஆருடத்தை சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது லீக் போட்டிகள் நிறைவடைந்து பிளே ஆப் சுற்றுக்கு காத்திருக்கிறது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ப்ளே ஆப் சுற்றைப் பொறுத்தவரை முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி தங்களுக்குள் மோதிக் கொண்டு அதில் வெற்றி பெறும் அணியுடன் நேரடியாக இறுதிப் போட்டிக்கும், தோல்வி பெறும் அணி மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த வெற்றி பெற்ற அணியோடு தோல்வி அடைந்த அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி முதலாவதாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணியுடன் மோதி எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
இந்த சூழ்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கும் போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் பெங்களூர் அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்று பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிக்கிறது. இந்த சூழ்நிலையில் எந்த அணிவெற்றி பெறும் என்ற கேள்விக்கு அம்பத்தி ராயுடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“என்னை பொருத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் இந்த சீசனில் பெங்களூரு அணி மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் பெற்ற வெற்றியும் மறக்க முடியாதது. தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி தனக்கு கிடைத்த வாய்ப்பை அவ்வளவு சீக்கிரம் விடாது என்ற கருதுகிறேன்.
இதையும் படிங்க:தயாளை ஆர்சிபி வாங்கி 5 கோடியை சாக்கடையில வீசிடுச்சுன்னு சொன்னாங்க.. யாஷ் தயாள் தந்தை உருக்கமான பேட்டி
கடந்த போட்டிகளின் மூலம் கிடைத்துள்ள முடிவு மற்றும் உத்வேகத்துடன் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். பெங்களூர் அணி வீரர்கள் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி வருவதால் இந்த போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

