சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கடைசி ஓரை மிகச் சிறப்பாக வீசிய பெங்களூர் அணியின் யாஷ் தயாள் கதாநாயகனாக உருவாகி இருக்கிறார்.
அவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் பெங்களூர் அணியும் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அது குறித்து தயாளின் தந்தை உருக்கமான தகவல்களை பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு விளையாடிய தயாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா ரிங்கு சிங் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி கதாநாயகனாக உருமாறுவார். அங்கிருந்து ரிங்கு சிங்கின் வாழ்க்கை ஏற்றமடைய துவங்கியது.
ஆனால் அவருக்கு பந்து வீசி 5 சிக்ஸர்களை வழங்கிய தயாளின் வாழ்க்கை இரக்கமடைய தொடங்கியது. இதனால் இந்த ஏலத்தில் குஜராத் அணியும் அவரை கழட்டி விட்டது. அந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவர் ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு ஆர்சிபி அணியின் பௌலிங் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி களத்தில் இருக்கும்போதே கடைசி ஓவரை சிறப்பாக வீசிய தயாள் அந்த ஓவரில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 10 ரன்களை மிச்சபடுத்தி பெங்களூர் அணியை பிளே ஆப் செல்ல முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இது குறித்து யாஷ் தயாள் கூறும் பொழுது
“நான் எனது கடைசி ஓவரை வீசி முடித்ததும் என் தாயிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டேன். கடந்த சீசனில் ஏற்பட்டது எனக்கு ஒரு மறக்க முடியாத பயங்கரமான கனவு.
மகேந்திர சிங் தோனி அந்த 110 மீட்டர் சிக்ஸரை அடித்ததும், அது திரும்பவும் நினைவு படுத்தபடுமோ? என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் ஏதாவது ஒரு நல்லது நடக்கும் என்று தோன்றியது. இது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பலன். எனக்கு கடவுள் கருணை காட்டி இருக்கிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா இந்த டீமுக்கு எதிரா விளையாடும் போது நீங்க எல்லாரும் அவரை பாராட்டுவீங்க.. சுரேஷ் ரெய்னா பேட்டி
இதுகுறித்து யாஷ் தயாளின் தந்தை கூறும் பொழுது
“என் மகன் ஓவரில் ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்த பிறகு மோசமான மீம்கள் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டதால் நானும் எனது குடும்பம் அதிலிருந்து வெளியே வந்தோம். மேலும் ஆர்சிபி அணி அவரை ஐந்து கோடிக்கு வாங்கிய பிறகு ஆர்சிபி நிர்வாகம் 5 கோடியை சாக்கடையில் வீசிவிட்டது என்று ஒருவர் கூறியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது ” என்று கூறி இருக்கிறார்.

