ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் போட்டிகள் முழுவதுமாக நிறைவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் நடைபெற இருக்கின்றன. ஐபிஎல் தொடர் முழுவதுமாக முடிந்த உடன் வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணி குறித்தும் ஹர்திக் பாண்டியா குறித்தும் சில சுவாரசியமான தகவல்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உலக கோப்பையில் விளையாடும் டி20 இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அது அறிவித்தது முதலே பல சர்ச்சைகளும், விவாதங்களும் இருந்தன. இந்திய அணியில் எதற்காக நான்கு ஸ்பின்னர்கள்? ரிங்கு சிங்கை எதற்காக விடுவித்தது? முகமது சிராஜ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன்?, நடராஜன் ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்பது தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சிஎஸ்கே முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா இந்திய அணி குறித்தும், ஹர்திக் பாண்டியா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது
“உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த காரணத்தால் பிட்ச்சுகள் சற்று சரிந்தே காணப்படும்.
இதனால் நமது இந்திய அணி வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு பழகிக்கொள்ள வேண்டும். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அதேபோல விராட் கோலி ஐபிஎல் தொடரில் இருந்து நல்ல பேட்டிங் பார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவிற்கும் பந்து தற்போது நன்றாக பேட்டில் படுகிறது.
மேலும் இரண்டு இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் என்று இரண்டு ஸ்பின்னர்கள் செல்கிறார்கள். இதனால் இந்திய அணி வீரர்கள் தேர்வில் சரிசமமான நிலையில் உள்ளது. ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார். தற்காலிகமாக உள்ள மோசமான பேட்டிங் ஃபார்ம் தனிப்பட்ட முறையிலும், இந்திய அணிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
இதையும் படிங்க:இது எல்லாம் தேவைதானா.? கம்பீரைத் தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை கண்டித்த ரோஹித் சர்மா.. வைரலாகும் இணையதள பதிவு
அவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் அனைவரும் அவரை பாராட்டுவீர்கள்” என்று தனியார் ஊடகத்திற்கு ரோகித் சர்மா பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.

