ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து ரோஹித் சர்மா ட்விட்டர் தளத்தில் பதிவினை வெளியிட்டு இருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து கௌதம் கம்பீரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் செயல்பாடுகளை கண்டித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. முதலில் இந்தப் போட்டிகளை சோனி மேக்ஸ் நிறுவனம்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த சேனலை விட அதிக விலை கொடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கி தற்போது போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிலையில் போட்டிகளைத் தாண்டி வீரர்களின் அந்தரங்க செயல்பாடுகளை அவர்களின் அனுமதியின்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்புவதாக ரோகித் சர்மா குற்றம் சாட்டியிருந்தார். அதாவது இந்த தொடரில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கொல்கத்தா வீரர்களிடையே ரோஹித் சர்மா பேசிக் கொண்டிருந்ததை இந்த சேனல் நிறுவனம் ஒளிபரப்பியது.
அதனைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு இடையேயான போட்டியின் போதும் லக்னோ அணி வீரர்கள் இடைய ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்ததை அவரின் அனுமதி இன்றி ஒளிபரப்பியது. இந்த சூழ்நிலையில் அவரது எக்ஸ் தலத்தில் இது குறித்து பதிவிட்டு இருந்த ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதை விட்டுவிட்டு வீரர்களின் அந்தரங்க செயல்பாடுகளை அவர்களின் அனுமதி இன்றி ஒளிபரப்புகிறது என்று பதிவிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு தற்போது ஆதரவு பெருகி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன் செயல்பாடுகளை முன்னரே விமர்சித்துள்ளார். அதில் அவர் “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் சில அணிகளுக்கு மக்கள் தொடர்பாளராக செயல்படுகிறது எனவும், போட்டிகளின் போது குறிப்பிட்ட 3 பிளேயர்களின் உழைப்பை மட்டுமே காட்டி அவர்களை தூக்கிவிட்டு மற்ற பிளேயர்களின் உழைப்பை மட்டுப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
அதுபோல நசீர் ஹுசைன் போன்றோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது பல விளையாட்டுத் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர். தற்போது ரசிகர்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு எதிராக ஹேஷ் டாக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா அணி வீரர்களிடையே மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும் தனது செயல்பாடுகள் குறித்தும் பேசி இருந்த நிலையில், அவரின் அனுமதியின்றி அதனை வீடியோ எடுத்து ஒளிபரப்பியதால் அது சமூக வலைதளங்களில் வைரலாகி ரோஹித் சர்மா மும்பை அணியை விட்டு செல்ல போகிறார் என்ற தகவலும் வைரலாகியது.
The lives of cricketers have become so intrusive that cameras are now recording every step and conversation we are having in privacy with our friends and colleagues, at training or on match days.
— Rohit Sharma (@ImRo45) May 19, 2024
Despite asking Star Sports to not record my conversation, it was and was also then…

