சனிக்கிழமை நடைபெற்ற முக்கியமான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.
வீழ்த்தியது மட்டுமில்லாமல் நான்காவது அணியாக ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியை வீழ்த்தி தகுதி பெற்று இருக்கிறது. இந்த சந்தோஷத்தை மைதானத்தில் ஆர்சிபி வீரர்கள் கொண்டாடுவதை விட மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் அத்துமீறி கொண்டாடி வருகின்றனர்.
சென்னை அணியுடன் வெற்றி என்பது மறக்க முடியாத ஒன்றுதான். முதல் பாதியில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அதற்குப் பிறகு வெற்றிகளை குவித்து தற்போது ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது வரவேற்ப்புக் கூறிய விஷயம்தான். ஆனால் அதற்காக ஏதோ ஐபிஎல் கோப்பையை வென்று விட்டது போல ஆர்சிபி வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சற்று அளவுக்கு அதிகமாகவே கொண்டாடி விட்டதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களை அத்துமீறியும் தகாத செயல்களில் ஈடுபட்டும் அளவுக்கு அதிகமாகவே எல்லை மீறி இருக்கின்றனர். இது இப்போது வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பெங்களூர் அணி நாக் அவுட் சுற்றுக்குதான் தகுதி பெற்றது என்பதை மறந்து ஏதோ ஐபிஎல் கோப்பையை வென்றது போல பெங்களூரு நகரங்களில் பைக்குகளில் ரசிகர்கள் வலம் வருவதை காண முடிகிறது.
இதனைக் கண்ட சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு ஆர்சிபி ரசிகர்களை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“ஆர்சிபி அணி தற்போது தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. ஆனால் ஏதோ கோப்பையை வென்று விட்டது போல கொண்டாடுகிறார்கள். ஆர்சிபி ரசிகர்கள் வெறும் கைகளில் பெங்களூர் நகருக்குள் ஊர்வலம் செல்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஐந்து கோப்பைகள் இருக்கிறது. வேண்டுமானால் அதில் ஒன்றை வாங்கிக் கொடுத்து ஊர்வலம் செல்லச் சொல்லலாம். ஆனால் ஆர்சபி அணி இன்றைய போட்டியில் நன்றாகவே விளையாடினார்கள் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. இது நடந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்.. வீரேந்தர் சேவாக் ஓபன் டாக்
ஆனால் என்னுடைய கணிப்பு இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் ” என்று குறிப்பிடுகிறார். வருண் ஆரோன் அதற்கு கருத்து தெரிவிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் ஆறாவது பட்டத்தை ஆர்சிபி அணி தற்போது பறித்துள்ளது என்று கூறியிருக்கிறார். ராயுடுவின் கருத்தை தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடியும், ஆர்சிபி ரசிகர்கள் கொந்தளித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

