லார்ட் தாகூருக்கு திரும்ப சான்ஸ் கொடுத்தா கண்டிப்பா சிஎஸ்கே பொட்டலம்தான்.. பஞ்சாப் பிட்ச்ல இவருக்கு வாய்ப்பு கொடுங்க.. ரகசியம் கூறும் ஸ்ரீகாந்த்

நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 49 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை பந்துவீச்சு சுமாராக இருந்த நிலையில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் திரும்பவும் சென்னை அணி தோல்வி பாதையை மட்டும்தான் நோக்கி செல்லும் என்று ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கேவின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் டாசை இழந்த சென்னை முதலில் பேட்டிங் செய்தது. சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் விளையாடி தோல்வியை தழுவும் சென்னை அணி இம்முறை சொந்த மைதானத்திலேயே சில போட்டிகளில் தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆடுகளம் முதலில் பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்தது. இதை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சென்னை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். ரன்கள் குவிக்க போராடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.

- Advertisement -

இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணி சென்னை அணியின் சுமாரான பந்துவீச்சால் மிகவும் சிரமம் இன்றி ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக சர்துல் தாக்கூரின் 3.4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் மட்டுமில்லாமல் மேலும் சில போட்டிகளிலும் ரன்களை வாரிக் கொடுக்கும் இவருக்கு சென்னை அணி திரும்பத் திரும்ப வாய்ப்பு கொடுப்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சு குறித்து பேசிய ஸ்ரீகாந்த்
“தாகூரை எதற்காக சிஎஸ்கே நிர்வாகம் இந்த அளவு நம்புகிறது என்று புரியவில்லை. பவர் பிளேவில் தாகூரை பயன்படுத்தி இருக்கக் கூடாது. முஸ்தபிகுர் ர் மற்றும் கீளீசனை வைத்து அட்டாக்கிங் செய்திருக்க வேண்டும். அதேபோல தொடக்க ஆட்டக்காரர் ரகானேவுக்கும் எதற்காக சென்னை அணி இவ்வளவு வாய்ப்பு கொடுக்கிறது என்று புரியவில்லை.

- Advertisement -

அடுத்த போட்டி இதே பஞ்சாப் அணியுடன் தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளதால் சாண்ட்னருக்கு அடுத்து போட்டியில் வாய்ப்பு கொடுக்கலாம். பேட்டிங்க்கு சாதகமான பிளாட் டிராக்குகளில் சாண்ட்னர் மிக அற்புதமாக பந்து வீசுவார். அதேபோல தாக்கூருக்கு பதிலாக முகேஷ் சௌத்ரிக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கலாம்.

இதையும் படிங்க:ஓட மறுத்த தோனி.. டேரில் மிட்செலுக்கு சிஎஸ்கே போட்ட ட்வீட்.. எவ்ளோ பீல் பண்ணி இருப்பார்.. ரசிகர்கள் வருத்தம்

எனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற நான்கு போட்டிகளில் சென்னை அணி மூன்று போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் இருப்பதால் சிஎஸ்கே குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். சிஎஸ்கே அடுத்த போட்டியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles