அடி தூள்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தில் நடித்துள்ள சிஎஸ்கே வீரர்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம்

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘கோட்’ படம் மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என ஒரு நட்சத்திரக் கூட்டணி நடித்து வருகிறது.

- Advertisement -

மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளது குறித்து அப்படத்தில் நடித்த அஜ்மலிடம் கேட்டபோது சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ருத்ராஜ் தலைமையில் நல்ல பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதுவரை விளையாடில் 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியையும் தழுவி இருக்கிறது. சமீபத்தில் வலுவான சன்ரைஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தற்போது நல்ல மனநிலையுடன் சென்னை அணி வீரர்கள் இருக்கின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே வீரர்கள் மட்டுமில்லாமல் இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள பத்து அணிகளின் வீரர்களும் கிரிக்கெட் சம்பந்தமான விளம்பரங்களில் நடிப்பதுண்டு.

- Advertisement -

அது அவ்வப்போது ஒரு ஓவர் இடைவெளியில் ஒளிபரப்பப்படும். இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் ஒரு படி மேலே சென்று தளபதி விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் அஜ்மலிடம் இது சம்பந்தமாக கேட்கப்பட்டது.

இது குறித்த அவர் கூறும் பொழுது
“அதைப் பற்றி தற்போது நான் எதுவும் வெளியில் சொல்ல முடியாது. இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பு நிறுவனமும் தான் கூற வேண்டும்” என்று முடித்துவிட்டார். அவர் உறுதியாக இல்லை என்று கூறாமல் அப்படத்தை பற்றி நான் எதுவும் கூற முடியாது என்று சொல்லியிருப்பதால் சிஎஸ்கே வீரர்கள் மூன்று பேர் நிஜமாகவே நடித்துள்ளது உண்மை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் கேரளாவில் நடந்ததை அடுத்து தளபதி விஜயின் ரசிகர்கள் படைதிறந்து அவரை வரவேற்றது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் முடியிற வர பொறுக்க முடியாது.. கிளம்பி வாங்க.. சிஎஸ்கே மொயின் அலி உட்பட 8 வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் ஆர்டர்.. காரணம் என்ன.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதியன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் கிங்ஸ் அணி சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான மிகப்பெரிய ரன் இலக்கை சேஸ் செய்துள்ளதால் இப்போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles