ஐபிஎல் முடியிற வர பொறுக்க முடியாது.. கிளம்பி வாங்க.. சிஎஸ்கே மொயின் அலி உட்பட 8 வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் ஆர்டர்.. காரணம் என்ன.?

2024 டி20 உலக கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலக கோப்பையில் இடம்பெறும் வீரர்கள் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.

- Advertisement -

இதில் ஐபிஎல்லில் பங்குபெறும் எட்டு வீரர்கள் ஐபிஎல் தொடர் முடியும் முன்னரே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர்களை இங்கிலாந்துக்கு அழைத்துள்ளது. இதனால் ஐந்து ஐபிஎல் அணிகள் பாதிப்படையும் நிலையில் உள்ளன.

- Advertisement -

ஐசிசி தொடர்களில் முக்கிய தொடரான டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாட்டு அணியும் மற்ற அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி வருகிற மே மாதம் 22ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கு பெற உள்ளது.

- Advertisement -

உலக கோப்பைக்கு முன்பாக இது ஒரு சிறந்த பயிற்சி ஆட்டமாக கருதப்படுவதால் ஐபிஎல் இல் பங்கு பெற்று விளையாடிக் கொண்டிருக்கிருக்கும் எட்டு வீரர்கள் ஓரிரு வாரங்களில் இங்கிலாந்து திரும்ப உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை அதில் விளையாடி வரும் மொயின் அலி கூடிய விரைவில் இங்கிலாந்து திரும்ப உள்ளார்.

இருப்பினும் ஒரு சில போட்டிகளே சென்னை அணிக்காக விளையாடியுள்ள நிலையில் அவரது இழப்பு சென்னை அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தொடக்கத்தில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி எட்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்ஸ அணி தற்போது புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இவர் இழப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். பஞ்சாப் அணியில் ஷாம் கரண், லியான் லிவிங்ஸ்டன் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஷிகர் தவான் காயம் காரணமாக வெளியேறியுடன் நிலையில் ஷாம் கரண் பஞ்சாப் அணி கேப்டனாக தொடர்கிறார். பேர்ஸ்டோ சமீபத்தில் சதம் விளாசி தனது இழந்த ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். பெங்களூர் அணியில் பொறுத்தவரை வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லீ ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பை.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ.. சிஎஸ்கே வீரருக்கு இடம்.. ஆச்சரியமாக இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் துணை கேப்டன் பதவி.. முழு விபரம்

சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் வில் ஜேக்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் சதம் விளாசினார். மற்றும் ரீஸ் டாப்பிலியும் விளையாடி வருவதால் இது பெங்களூர் அணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் பில் சால்ட் இதுவரை ஒன்பது இன்னிங்சில் விளையாடி 150 ஸ்ட்ரைக் ரேட் உடன் 392 ரன்கள் இதுவரைக்கும் குவித்துள்ளார் இவரது விலகல் நிச்சயம் கொல்கத்தா அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles