டி20 உலக கோப்பை.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ.. சிஎஸ்கே வீரருக்கு இடம்.. ஆச்சரியமாக இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் துணை கேப்டன் பதவி.. முழு விபரம்

2024 டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் டி20 உலக கோப்பைக்கான வீரர்களை அறிவித்து வரும் நிலையில், இந்திய அணியும் தற்போது 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்துள்ளது. இதில் சில எதிர்பார்த்த நிகழ்வுகளும், எதிர்பாரா நிகழ்வுகளும் நடந்துள்ளன.

- Advertisement -

இந்த 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆக தொடர்கிறார். விராட் கோலிக்கு இந்த உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மோசமான ஃபார்ம் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் இடம் கேள்விக்குறியாகி வந்த நிலையில் தற்போது அவர் துணை கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கலக்கிக் கொண்டிருக்கும் கேப்டனான சஞ்சு சாம்சன்க்கு இடம் கிடைத்திருக்கிறது. மேலும் சென்னை அணியில் தற்போது கலக்கி கொண்டு வரும் சிவம் தூபேவும் தற்போது உலகக் கோப்பை அணியில் இருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட்டில் பினிஷிங் ரோலில் களம் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

சுழற் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆல்ரவுண்டர் இருக்கிறார்கள். மேலும் சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு சுழற் பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். சஹால் ஐசிசி தொடரில் முதல் முறையாக வாய்ப்பு பெறுகிறார். லக்னோ அணியில் விளையாடிக் கொண்டிருந்த ரவி பிஷ்ணாய்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங், பும்ரா ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் பும்ராவிற்கு பிறகு, நடராஜன் மட்டுமே டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இடம் அளிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

- Advertisement -

லக்னோ அணியில் கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் விபத்தில் சிக்கி காயம் அடைந்த தற்போது டில்லி அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் ரிஷப் பண்ட் இந்திய அணியுடன் இணைகிறார்.

2024 டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாகல், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட் என் மகனைப் போன்றவர்.. அவருக்கு விபத்து ஏற்பட்ட போது மிகவும் பதறி விட்டேன்.. டெல்லி கேப்டன் குறித்து பேசிய ஷாருக்கான்

மேலும் இந்த அணி உடன் ரிசர்வ் வீரர்களாக கலீல் அகமது ரிங்கு சிங் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய நான்கு வீரர்களும் செல்கிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles